கடைசி நேர பதற்றம்; அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சியில் உறவினர்கள்!

 

கடைசி நேர பதற்றம்; அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சியில் உறவினர்கள்!

நான் கட்சி ஆரம்பிக்கிறேனோ இல்லையோ, தேர்தலில் போட்டியிடுகிறேனோ இல்லையோ ஸ்டாலினை முதல்வர் ஆக விடமாட்டேன் என்று மதுரையில் ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஆவேசமாக அழகிரி பேசிய பின்னர் ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை. அதனால்தான் அழகிரி இதுநாள் வரைக்கும் அமைதியாக இருக்கிறார் என்கிறார்கள்.

கடைசி நேர பதற்றம்; அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சியில் உறவினர்கள்!

அழகிரியின் பேச்சுக்கு யாரும் பதில்கொடுக்க கூடாது . அதுகுறித்த பேச்சையே எடுக்க கூடாது என்று ஸ்டாலின் உத்தரவிட்டதால், யாரும் அதுகுறித்து பேசவே இல்லை. பேசினால் விபரீதமாகும் என்பதை உணர்ந்துதான் ஸ்டாலின் அவ்வாற்று கேட்டுக்கொண்டிருந்தார். ஸ்டாலின் நினைத்தபடியே நடந்தது. அத்தனை ஆவேசப்பட்ட ஆழகிரி அதன் பின்னர் அமைதியானார்.

இதையடுத்து ஸ்டாலின் ஒரு பேட்டியில், அழகிரியை ‘என் அண்ணன்’ என்று சொல்ல, அதில் ரொம்பவே நெகிழ்ந்துவிட்டாராம் அழகிரி. இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொண்டு, குடும்பத்தினர் அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருக்கின்றனர்.

கடைசி நேர பதற்றம்; அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சியில் உறவினர்கள்!

தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் ஏதாவது செய்துவிடுவோரே என்று பயந்து அவரை சமாதானப்படுத்திக் கொண்டே இருக்கிறார்களாம்.

ஒதுங்கி இருங்கள். ஆட்சி வந்ததும் உங்களுக்கு உரிய மரியாதை வந்து சேரும் என்று சசிகலாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருப்பதை போலவே, அழகிரிக்கும் சொல்லி சமாதானப்படுத்தி வருகிறார்களாம்.

இருந்தாலும், சில கட்சிகளிடம் இருந்து வரும் அழுத்தத்தினால் கடைசி நேரத்தில் மனம் மாறி ஏதும் செய்துவிடுவாரோ என்றுதான் பதற்றத்தில் இருக்கின்றனர் ஸ்டாலின் குடும்பத்தினர்.