Home அரசியல் கமல் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்; செந்தில்பாலாஜிக்கு வக்காலத்து வாங்கும் ஜோதிமணி

கமல் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்; செந்தில்பாலாஜிக்கு வக்காலத்து வாங்கும் ஜோதிமணி

ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் தாராளமாக மணல்கொள்ளை அடிக்கலாம். எதிர்த்து கேட்கும் அதிகாரிகளை அந்த இடத்தை விட்டே ஓடவிட்டுவிடுவேன் என்ற திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியின் பேச்சினை கமல்ஹாசன் கடுமையாக கண்டித்திருந்தார். அதற்காக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செந்தில்பாலாஜியின் திமிர் பேச்சுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.

கமல் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்; செந்தில்பாலாஜிக்கு வக்காலத்து வாங்கும் ஜோதிமணி
ஜோதிமணி

கரூர் திமுக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் செந்தில்பாலாஜி பிரச்சாரத்தின்போது, ‘’திமுக எத்தனையோ வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக நான் ஒன்றை சொல்லிக்கொள்கின்றேன். மாட்டுவண்டியில் மணல் எடுப்பதற்கு தளபதி ஆட்சியில் தடையில்லை. தளபதி முதலமைச்சராக பதவியேற்றதும், 11மணிக்கு முதலமைச்சராக தளபதி பதவியேற்றுக்கொண்டால், 11.05க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான். தடுத்தா எனக்கு போன் போடுங்க. அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான்’’ என்று திமிராக பேசியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

கமல் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்; செந்தில்பாலாஜிக்கு வக்காலத்து வாங்கும் ஜோதிமணி

பல்வேறு தரப்பினரும் செந்தில்பாலாஜியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நீதிமய்யம் கமல்ஹாசனும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

’’தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.
எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர்.
அதன் காரணமாக கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம்’’ என்கிறார் கமல்.

கமல் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்; செந்தில்பாலாஜிக்கு வக்காலத்து வாங்கும் ஜோதிமணி

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ‘’கரூரில் இரவு பகலாக பொக்லைனில் வாரி ஆயிரக்கணக்கான லாரிகளில் காவேரி ஆற்றையே ஏற்றும் மணல்கொள்ளையை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்துகிறார். கூடுதலாக அதிமுகவினர் மாட்டுவண்டிக்கு மட்டும் அனுமதி. அதற்கும் வண்டிக்கு மாதம் ரூ 5000 அமைச்சருக்கு கப்பம் கட்டவேண்டும். இதை தட்டிக் கேட்பது குற்றமா? மணல் கொள்ளைக்கு ஆதரவாக அமைச்சர் விஜயபாஸ்கரோடு சேர்ந்து அதிகாரிகள் அடித்த கொட்டம் கொஞ்சமல்ல. ஏதோ கரூரில் மணல் கொள்ளையே நடக்காதது போல எதற்கு அதிமுகவிற்கு நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள்? ஒருவர் சொன்னதை உள்நோக்கத்தோடு திரித்து சொல்வது அறமா?இதற்காக மன்னிப்பு கேளுங்கள்’’ என்கிறார்.

செந்தில்பாலாஜி பேசும்போது அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜோதிமணி, அவர் செய்த தவறை சுட்டிக்காட்டாமல், கமல்ஹாசன் மீது பாய்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை என்கின்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கமல் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்; செந்தில்பாலாஜிக்கு வக்காலத்து வாங்கும் ஜோதிமணி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி செய்த முயற்சி- சில மணி நேரங்களில் கணவன் மரணம்

தனது கணவன் திடீரென்று கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, கணவன் உயிர் இழந்து விடுவார் என்பதை உறுதி செய்து கொண்ட மனைவி,...

“சென்னையிலிருந்து கடலூர், நாகைக்கு பயணிகள் கப்பல்”

சென்னை -புதுச்சேரி- காரைக்கால் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து...

தமிழகத்துக்கான 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வருகிறது!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,830பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 44 ஆயிரத்து 870ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 24 பேர்...

காப்பி அடித்தபோது சிக்கியதால் கல்லூரியில் 3வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சவீதா மருத்துவக் கல்லூரியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கல்லூரி மாணவர்களை உலுக்கி எடுத்திருக்கிறது.
- Advertisment -
TopTamilNews