அதை சுட்டிக்காட்டி பேசும் ஈபிஎஸ்! க்ளாப்ஸ் அள்ளுது!

 

அதை சுட்டிக்காட்டி பேசும் ஈபிஎஸ்!  க்ளாப்ஸ் அள்ளுது!

எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு மக்களிடையே குறிப்பாக தாய்மார்களிடையே அமோக வரவேற்பு இருப்பதால், தேர்தல் பணிகளில் உற்சாகம் காட்டுகின்றனர் அதிமுகவினர் என்ற தகவல் வந்தது. ’’அட, ஆமாங்க.. ’’என்றுதான் அந்த சீனியரும் நம்மிடையே அழுத்தமாக சொன்னார்.

அதை சுட்டிக்காட்டி பேசும் ஈபிஎஸ்!  க்ளாப்ஸ் அள்ளுது!

மேற்கு மண்டல அதிமுக சீனியர் ஒருவர் இது குறித்து நம்மிடம் பேசியபோது’’ நாங்கள் அறிவித்த திட்டங்களைத்தான் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். வீட்டிற்கு ஒரு வாஷிங் மிஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, விலையில்லா கேபிள் டிவி இணைப்பு, பெண்களுக்கான குலவிளக்கு திட்டம், மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்வு அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா வீடு திட்டம், ரேசன் பொருட்கள் வீடு தேடி சென்று விநியோகம் என்பது உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளுக்கு நல்ல வரவேற்பு காணப்படுவதை ஓட்டுக் கேட்டுச் செல்லும்போது உணர முடிகிறது’’என்றார்.

அதை சுட்டிக்காட்டி பேசும் ஈபிஎஸ்!  க்ளாப்ஸ் அள்ளுது!

’’அதுமட்டுமா திமுக ஆட்சியின்போது காணப்பட்ட மின்வெட்டு, நில அபகரிப்பு போன்றவற்றையெல்லாம் மக்கள் மறக்கவில்லை. அதைச் சுட்டிக்காட்டி நாங்கள் பேசும்போது, அதை மக்கள் கைதட்டி வரவேற்கிறார்கள்’’ என்றார் உற்சாகம் பொங்க. அவரது உற்சாகத்தை வைத்தே பிரச்சாரத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு இருக்கும் வரவேற்பினை புரிந்துகொள்ள முடிகிறது.

அதை சுட்டிக்காட்டி பேசும் ஈபிஎஸ்!  க்ளாப்ஸ் அள்ளுது!

உற்சாக மிகுதியில் இருந்த அந்த சீனியர் மேலும் அதுகுறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார். ‘’எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர், தனது பிரசாரத்தை அங்கேயே தொடங்கினார். பிரசாரத்தின் தொடக்கத்திலேயே சிக்ஸராக வெளுத்து வாங்கி விட்டார். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதன் முதலாளிதான் ஸ்டாலின். அதில் உதயநிதி கனிமொழி , தயாநிதி மாறன் போன்றோர் போர்டு ஆப் டைரக்டர்கள். இவர்களெல்லாம் சேர்ந்துதான் அந்த கம்பெனியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசியதற்கு மக்களிடையே க்ளாப்ஸ் அள்ளியது.


’ நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்பதால்தான் மக்கள் திமுகவை மறந்துவிட்டார்கள். ஆகவே மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று ஒருபோதும் நினைத்து விடாதீர்கள். உங்கள் கனவு ஒரு போதும் பலிக்காது’ என ஸ்டாலினைப் போட்டுத் தாக்கிய எடப்பாடி, ‘’உங்களுக்குச் சேவை செய்யவும், எடப்பாடி தொகுதி தொடர்ந்து முதலமைச்சர் தொகுதியாக இருக்கும் என்ற நிலையை உருவாக்கிடவும், எடப்பாடி தொகுதி தமிழகத்தில் ரோல் மாடலாக இருக்கவும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டபோது, அங்கு கூடியிருந்த மக்கள் இரட்டை விரலைக் காண்பித்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இப்படி எடப்பாடிக்கு மக்களிடையே காணப்படும் ஆதரவலையால், அறிவாலயம் அரண்டு கிடக்கிறது’’ என்றார் அவர்.