‘இந்துக்கள் ஓட்டு வேண்டாம் போடா -திமுக’ கலக்கும் டி-சர்ட்டுகள்

‘இந்துக்கள் ஓட்டு வேண்டாம் போடா -திமுக’ கலக்கும் டி-சர்ட்டுகள்

இந்தி திணிப்புக்கு எதிராக, ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டினை சினிமா பிரபலங்கள் சில அணிந்த போட்டோக்கள் இணையங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

‘இந்துக்கள் ஓட்டு வேண்டாம் போடா -திமுக’ கலக்கும் டி-சர்ட்டுகள்

திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்த திருப்பூர் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் கார்த்திகேயன் என்பவர்தான் இந்த டி-சர்ட்டினை வடிவமைத்திருந்தார். தமிழகம் மட்டுமல்லாது சிங்கப்பூர், அமெரிக்கா, கத்தார் நாடுகளில் உள்ள தமிழர்களும் இந்த டி-சர்ட்டினை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

‘இந்துக்கள் ஓட்டு வேண்டாம் போடா -திமுக’ கலக்கும் டி-சர்ட்டுகள்

பாஜகவுக்கு எதிரான திமுக பிரச்சாரம் என்று தமிழக பாஜகவினர் சிலர் அப்போது கொதிந்தெழுந்தனர். திமுகவின் அப்போதைய பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், ’இந்துக்கள் வாக்குகள் வேண்டாம் போடா!’ என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டினை திமுக பிரச்சாரம் செய்யலாமே, இந்த டி சர்ட்டினை உங்கள் டி-சர்ட் கம்பெனியிலேயே தயாரிக்கலாமே. அது முடியும் என்று கனிமொழிக்கு கூறியிருக்கிறார் தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரிரகுராம்.

‘இந்துக்கள் ஓட்டு வேண்டாம் போடா -திமுக’ கலக்கும் டி-சர்ட்டுகள்

இதற்கிடையில், திமுக எஸ்சி, ஒபிசி, மைனாரிட்டி ஓட்டுகளைத்தான் நாடுகிறது. அதற்கு இந்து ஓட்டு தேவையில்லை என்று ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு சொன்னதற்கு, ‘’ஆக, பாஜகவிற்கு உயர்சாதியினர் மட்டுமே இந்துக்கள்! பிஜேபி என்றால் பிராமணிய ஜனதா கட்சி என்பதை உறுதி செய்துவிட்டார்!’’ என்கிறார் அரசியல் விமர்சகர் அருணன்.

‘இந்துக்கள் ஓட்டு வேண்டாம் போடா -திமுக’ கலக்கும் டி-சர்ட்டுகள்

இந்துக்கள் என்றால் பிராமணர்கள் மட்டும்தான் என்கிற நோக்கில் காயத்ரி ரகுராமும், குஷ்புவும் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.