திமுகவுக்கு சொம்பு தூக்கும் திருமுருகன் காந்தி; கொந்தளிக்கும் உணர்வாளர்கள்

 

திமுகவுக்கு சொம்பு தூக்கும் திருமுருகன் காந்தி; கொந்தளிக்கும் உணர்வாளர்கள்

சமீப காலமாகவே மத்திய அரசை மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுகன்காந்தி கடுமையாக விமர்சித்து வரும்போதெல்லாம், அதிமுக கடுமையாக சாடியபோதெல்லாம், திமுகவுக்கு சொம்பு தூக்கு போகிறார் திருமுருகன்காந்தி, திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போகிறார் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

திமுகவுக்கு சொம்பு தூக்கும் திருமுருகன் காந்தி; கொந்தளிக்கும் உணர்வாளர்கள்

அது உண்மை என்பது போலவே திமுகவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதற்காக அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணுவிடம் சென்று வாழ்த்து பெற்றிருக்கிறார். அதுகுறித்து, ‘’பாசிச கூட்டணி பாஜக-அதிமுகவிற்கு எதிரான பிரச்சார துவக்கத்திற்காக முதுபெரும் கம்யூனிஸ்ட் போராளி ஐயா.நல்லகண்ணு அவர்களை சந்தித்து ஆலோசனைகளையும், வாழ்த்துகளையும் பெற்றோம். பாசிச பாஜக எதிர்ப்பு போராட்டத்திற்காக கைகோர்க்க வாருங்கள். ஒன்றாய் களமிறங்குவோம்.’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திமுகவுக்கு சொம்பு தூக்கும் திருமுருகன் காந்தி; கொந்தளிக்கும் உணர்வாளர்கள்

இதையடுத்து திருமுருகன்காந்தியை வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

’’ஒரு கேள்வி ! மே17 தொடங்கபட்டதன் நோக்கம் – 2009 இன அளிப்பு , இன அளிப்புக்கு காரணம் யார் !? துணை நின்றது யார் !? ஏதும் அது பற்றி இந்த தேர்தல் நேரத்தில் பேசாதது ஏன் தோழர்?’’ என சூட்டி என்பவரும், ’’மே17 என்ற எழுத்தை மாற்றிக்கொண்டு காங்கிரஸ் திமுக இன அழிப்பின் கூட்டாளி என உங்கள் இயக்கத்தின் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் .. ’’என சச்சின்சபரியும், ’’திமுகவிற்கு அளிக்கும் அதரவுக்கு கட்சி பேர் எதற்கு மே17.மார்ச் 3 கட்சி வெச்சுகொங்க. தனியா ஒருத்தன் நிக்கற பாரன் அவன்தான்டா கெத்து’’ என்று அருன்பிரசாத், ‘’வாழ்த்துகள், அப்படியே இனப்படுகொலை செய்த திமுக-காங்கிரஸ் எதிராகவும் பரப்புரை செய்வீர்கள் என்று நம்புகிறேன். அப்படி செய்யாவிட்டால் மூடிக்கிட்டு அமைதியாக இருக்கவும். நன்றி’’ என பிரபாத் என்பவரும் குறிப்பிட்டுள்ளனர்.

’’தோழர் செம உருட்டு. யாருமே கண்டுபிடிக்க முடியாது. நம்மளுக்கு தான் தேர்தல் அரசியல் முக்கியத்துவம் இல்லையே. பின்பு ஏன் பிரச்சாரம்? திமுகவுக்கு ஆதரவாகவா.? இதுக்கு பேரு தான் பிழைப்பு. என் நண்பன் மே17 இயக்கத்துக்கு மாதந்தோறும் 1000 ரூ அனுப்புவேன் என்று சொல்வான். அவன அடிக்கனும் செருப்பால’’என்று ரீகன் என்பவரும், ‘’தி.மு.க வுக்கு ஆதரவா… உங்கள் மீதிருந்த நம்பிக்கையே போச்சு.. பரவாயில்லை உங்கள் உண்மையான முகத்தை இப்போதாவது மக்களுக்கு காட்டியதுக்கு நன்றி.’’என ஈழத்தரசனும், ’’ஈழத்தமிழர்களை கொன்றொழித்த காங்கிரஸ் திமுக இப்ப உங்க லிஸ்ட்ல இல்லையா’’என தனுஷ் என்பவர் சாடுகிறார்.