அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் – அண்ணாமலை சத்தியம்

 

அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் – அண்ணாமலை சத்தியம்

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 2 தனித்தொகுதிகள் உள்பட 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடுகிறார். துணைத்தலைவர் அண்ணாமலை அரவக்குறிச்சியில் போட்டியிடுகிறார்.

அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் – அண்ணாமலை சத்தியம்

2016 தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி, பணப்பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்தார். இதனால் அவர் அதிமுகவில் இருந்து அமமுகவிற்கு சென்று பின்னர் அங்கிருந்து திமுகவுக்கும் சென்றபின்னர், அரவக்குறிச்சுக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆனால், அவர் இந்த தேர்தலில் மீண்டும் அரவக்குறிச்சியில் போட்டியிடவில்லை. கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

இல்லையேல் செந்தில்பாலாஜியை கடுமையாக விமர்சித்து வரும் அண்ணாமலைக்கும் அவருக்கும் கடுமையான போட்டி இருந்திருக்கும். செந்தில்பாலாஜி தொகுதியை மாற்றிக்கொண்டதால் அந்த பரபரப்பு அங்கே இல்லை.

அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் – அண்ணாமலை சத்தியம்

அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலை, தொகுதி மக்களுக்கு தான் அளித்துள்ள வாக்குறுதிகள்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் – அண்ணாமலை சத்தியம்

2026க்குள் அரவக்குறிச்சி தொகுதிக்குள் நான்கு பெரிய மத்திய தொழிற்சாலைகளை கொண்டு வந்து 40,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். இது சத்தியம். அப்படி செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.