சோதிடரின் ஆலோசனை படி பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின்

 

சோதிடரின் ஆலோசனை படி பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின்

இந்து என்று ஒரு மதமே இல்லை என்று சொல்லும் ராசாவே உங்கள் கட்சி ஆட்சியில் அண்ணா முதற்கொண்டு இந்து அற நிலையத்துறை என்று ஏன் ஒரு துறையை அமைத்தீர்கள் சுரண்டுவதற்கா? திமுகவில் 90% இந்துக்கள் உள்ளனர் என்று ஸ்டாலின் சொன்னாரே அதை நீங்கள் மறுக்க முடியுமா? என்று ஆ.ராசாவுக்கு கேள்வி எழுப்பியிருந்த தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரிரகுராம், சோதிடரின் ஆலோசனை படி திருவாரூரில் தெற்கு ரத வீதியில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை ஸ்டாலின் துவக்கியிருக்கிறார் பகுத்தறிவு பேசும் ராசாவே உங்கள்கட்சி தலைவரிடம் ஜோதிடர் அறிவுரையை கேட்கலாமா என்று முதலில் கேளுங்கள்? என்று மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

சோதிடரின் ஆலோசனை படி பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின்

திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் வெளியிட்ட பின்னர், தனது தந்தை பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்குவதாக ஸ்டாலின் அறிவித்து அதன்படியே செய்தார். சுதந்திர தினமும் குடியரசு தினமும் தான் தெரியாதுன்னா பார்த்தா அவங்க அப்பா பிறந்தது எந்த மாவட்டம்னே தெரியலை!. நாகை மாவட்டத்துல இருக்கும் திருக்குவளையை, திருவாரூர் மாவட்டத்தில் இருக்குன்னு சொல்ற இவர் தான் தமிழ் நாட்டுக்கு விடியலை தர போறாராம்!
நல்லா பார்த்துக்கோங்க என்றார் காயத்ரி ரகுராம்.

அமாவாசை நாள் அன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது போலவே, சோதிடரின் ஆலோசனை படி திருவாரூரில் தெற்கு ரத வீதியில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை ஸ்டாலின் துவக்கியிருக்கிறார் என்றே தெரிகிறது.