“கூலி கேட்ட தொழிலாளி ,கொளுத்தி போட்ட முதலாளி” -ஒயின் ஷாப்புக்குள் கிடந்த பாதி எரிந்த பாடி.

“கூலி கேட்ட தொழிலாளி ,கொளுத்தி போட்ட முதலாளி” -ஒயின் ஷாப்புக்குள் கிடந்த பாதி எரிந்த பாடி.

சம்பளம் கேட்ட தொழிலாளியை அந்த கடையின் உரிமையாளர்கள் தீ வைத்து கொளுத்தி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினையுண்டாக்கியுள்ளது .

“கூலி கேட்ட தொழிலாளி ,கொளுத்தி போட்ட முதலாளி” -ஒயின் ஷாப்புக்குள் கிடந்த பாதி எரிந்த பாடி.

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் கம்பூர் கிராமத்தில் சேர்ந்த கமல் கிஷோர் என்ற நபர் ஒரு மதுக்கடையில் விற்பனையாளராக இருந்தார். அந்த கடை உரிமையாளர்களான சுபாஷ் சந்த் மற்றும் ராகேஷ் யாதவ் ஆகியோர் அவருக்கு இரண்டு மாதமாக சம்பளம் தரவில்லை .அதனால் அவர் தன்னுடைய முதலாளியிடம் அடிக்கடி சம்பளம் கேட்டு தகராறு செய்துள்ளார் .
அதனால் கோபமுற்ற அந்த கடையின் முதலாளிகள் அவரை சனிக்கிழமை இரவு தீவைத்து கொளுத்தி விட்டார்கள் .பின்னர் அவர் இறந்ததும் அவரின் பாதி எரிந்த நிலையிலிருந்த உடலை அந்த கடையில் உள்ள சரக்கு பாட்டில் வைக்கும் குளிர் சாதன பெட்டியின் பிரீஸருக்குள் வைத்து விட்டார்கள் .
சனிக்கிழமை வீட்டை விட்டு போன தங்களின் மகன் இரண்டு நாட்களாக வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரின் உறவினர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள் .அப்போது போலீசார் அந்த பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அந்த ஒயின் ஷாப்பில் சனிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்ததை தாங்கள் பார்த்ததாக கூறினார்கள் .அதனால் போலீசார் கடையின் உரிமையாளர்களை விசாரித்து அந்த கடைக்குள் சென்று பார்த்தார்கள் .,அப்போது அந்த கடையின் பிரீஸருக்குள் கிஷோரின் பாதி எரிந்த உடல் இருந்தது .அதனால் போலீசார் மேற்கொண்டு இறந்தவரின் குடும்பத்தினரிடம் கேட்டபோது அவர்கள் கமல் கிஷோரை அவரின் முதலாளிகள் சம்பளம் கேட்டதால் எரித்து கொன்றதாக கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“கூலி கேட்ட தொழிலாளி ,கொளுத்தி போட்ட முதலாளி” -ஒயின் ஷாப்புக்குள் கிடந்த பாதி எரிந்த பாடி.
REB IMAGE