வங்கதேசத்தில் படகும், கப்பலும் மோதல் – 23 பேர் பலி; பலரை காணவில்லை

வங்கதேச தலைநகர் டாக்காவில் படகும், கப்பலும் மோதிய விபத்தில் 23 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் படகும், கப்பலும் மோதிய விபத்தில் 23 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் கப்பலும், ஒரு படகும் மோதிய விபத்தில் படகு நீரில் கவிழ்ந்தது. இதையடுத்து இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து வந்தனர். மூழ்கிய படகில் இருந்து 23 சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். மேலும் பலரை காணவில்லை என்று தெரியவந்துள்ளது.

மொத்தம் 50 பேர் படகில் பயணித்ததாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர். நாட்டின் பல படகு மற்றும் கப்பல்களில் கட்டுமான பாதுகாப்புத் தரம் குறைவாக இருப்பதால் வங்கதேசத்தில் படகு விபத்துக்கள் நிகழ்வது தொடர்கதையாக உள்ளது. படகில் அதிகம் பேர் பயணிப்பது அல்லது மோசமான வானிலை காரணமாக படகு விபத்துகள் வாடிக்கையாக அந்நாட்டில் நிகழ்கின்றன.

- Advertisment -

Most Popular

தமிழகத்தில் இன்று மேலும் 3,827 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 15 லட்சத்து 90ஆயிரத்து 635ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 37ஆயிரத்து 436 பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட புதுக்கோட்டை சிறுமியின் குடும்பத்திற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் ரூ.50000 நிதியுதவி

அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 50 ஆயிரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் மன்றம் சார்பாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்...

பாலியல் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் கொரானா-கஸ்டமர் வராததால் பெரும் கஷ்டத்தில் வாடும் நிலை ..

கொரானாவால் எந்த தொழிலையும் மாஸ்க் போட்டுகொண்டு,ம் சமூக இடைவெளியுடனும் செய்யலாம் .ஆனால் பாலியல் தொழிலை அப்படி நடத்த முடியுமா ?முடியாது ,அதனால் அதை தவிர வேறு தொழில் எதுவும் தெரியாத பாலியல் தொழிலாளர்கள்...

மாஸ்க் போடவில்லை என்றால் மீன் மார்க்கெட்டில் அனுமதிக்க கூடாது – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை காசிமேட்டில் பொதுமக்களுக்கு மீன் சில்லறை விற்பனை நடைபெறாது என்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மீன் விற்பனை செய்யலாம், தற்போது துறைமுகத்தில் சில்லறை விற்பனை செய்யும் வியாபரிகளுக்கு...
Open

ttn

Close