‘2021ல் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை’ தமிழக அரசு அரசாணை வெளியீடு!

 

‘2021ல் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை’ தமிழக அரசு அரசாணை வெளியீடு!

அடுத்த ஆண்டு 23 நாட்கள் அரசு விடுமுறை வருவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு இறுதி மாதங்களிலும், அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை அரசு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மொத்தம் 23 விடுமுறை நாட்கள் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும். இந்த ஆண்டு மக்கள் எதிர்பார்த்ததை விட, போதும் போதும் என சொல்லும் அளவிற்கு கொரோனா வைரஸ் கொடுத்து விட்டது.

‘2021ல் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை’ தமிழக அரசு அரசாணை வெளியீடு!

இந்த நிலையில், 2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறையாக இருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ஆறு நாட்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையாக வருகிறது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எல்லா பண்டிகைகளும் சேர்த்து 23 நாட்கள் விடுமுறை என்றும் அரசு தெரிவித்துள்ளது.