23 ‌குழந்தைகளை பிணைக்கைதிகளாக வைத்திருந்த நபர் சுட்டுக்கொலை!

 

23 ‌குழந்தைகளை பிணைக்கைதிகளாக வைத்திருந்த நபர் சுட்டுக்கொலை!

அப்போது விழாவுக்கு வந்த 15 வயதிற்குட்பட்ட 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் வீட்டிலேயே சிறைபிடித்தார் பாதம். 

ஃபரூக்காபாத் மாவட்டம் கசாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் பாதம்.  சமீபத்தில் கொலை வழக்கில் சிறைசென்று ஜாமீனில் வந்த அவர் மகன் பிறந்தநாள் விழாவுக்கு அப்பகுதி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்போது விழாவுக்கு வந்த 15 வயதிற்குட்பட்ட 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் வீட்டிலேயே சிறைபிடித்தார் பாதம். 

ttn

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்  அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால்  பாதம் அவர்களை துப்பாக்கியால் சுட போலீசார் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இதனால்  தேசிய பாதுகாப்புப் படையினரும் அங்கு வந்து சேர்ந்த பிறகு, அதிரடி தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ttn

இந்த தாக்குதலில் சுபாஷ் பாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். 8 மணி நேரத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட குழந்தைகள் 23 பேரும்  பத்திரமாக மீட்கப்பட்டனர். சுபாஷ் பாதம் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. ஒருவேளை அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் குழந்தைகளை பத்திரமாக மீட்ட போலீசாருக்கு  உத்தரப்பிரதேச அரசு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.