23 வாரத்தில் அரை கிலோ பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவமனை! 

23 வாரத்தில் அரை கிலோ பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவமனை! 

23 வாரத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை 20 வாரங்களாக  வைத்து பாதுகாத்து நாகை அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் காப்பாற்றியுள்ளனர்.  

23 வாரத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை 20 வாரங்களாக  வைத்து பாதுகாத்து நாகை அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் காப்பாற்றியுள்ளனர்.  

சமாதானம் பேட்டையைச் சேர்ந்த மீனவர் செல்வமணியின் மனைவி லதாவுக்கு நாகப்பட்டினம் மருத்துவமனையில் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தாயின் வயிற்றில் 23 வாரங்கள் மட்டுமே இருந்து குறைப்பிரவசத்தில் பிறந்தது. முன்னதாக கருத்தரித்த ஒரு குழந்தையை அபார்ஷனில் பறிகொடுத்துள்ளார் லதா. அதனால் அவரின் இரண்டாவது குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் மருத்துவர்கள் போராடியுள்ளனர். 23 வாரத்தில் பிறந்த குழந்தையை காட்டியபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார் லதா.

BABY

மருத்துவர்கள் பலரும் நம்பிக்கை இழந்து விட்டனர். குழந்தை பிழைப்பது கடினம் என்று கூறினாலும் நம்பிக்கை இழக்காமல் சிகிச்சை அளித்துள்ளனர். அடுத்த 20 வாரங்கள் குழந்தையை இன்குபேட்டரில் பாதுகாத்து வளர்த்து ஆரோக்கியமான குழந்தையாக பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அரை கிலோ எடையுடன் பிறந்த இந்த குழந்தை, இந்தியாவிலேயே குறைவான எடையில் 3வது மற்றும் தமிழகத்தில் 2வது குழந்தையை நாகை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிழைக்கவைத்து சாதனைப்படைத்துள்ளனர்.