23 நாட்களில் பஞ்சாப்பில் வந்து இறங்கிய 90,000 வெளிநாடு வாழ் இந்தியர்கள்… கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்…..

 

23 நாட்களில் பஞ்சாப்பில் வந்து இறங்கிய 90,000 வெளிநாடு வாழ் இந்தியர்கள்… கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்…..

இந்த மாதத்தில் மட்டும் பஞ்சாப்பில் அந்த மாநிலத்தை சேர்ந்த 90 ஆயிரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கு வந்து இறங்கி உள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தகவல்.

தொற்று நோயானா கொரோனா வைரஸ் நம் நாட்டில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களால் பரவ தொடங்கியது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்படுவர்கள் மற்றும் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 478ஆக உயர்ந்துள்ளது. உயிர்பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

பஞ்சாப் முதல்வர் கேப்டம் அமரீந்தர் சிங்

பஞ்சாப மாநில சுகாதார துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து மாநிலத்தின் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து மத்திய சுகாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், குஜராத்தில் மட்டும் இதுவரை 23 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா வைரசுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். இந்நிலையில் பஞ்சாப்பில் இந்த மாதத்தில் மட்டும் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் அந்த மாநிலத்தை சேர்ந்த 90 ஆயிரம் பேர் அந்த மாநிலத்துக்கு வந்துள்ளனர். இதனால் அந்த மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்

கிருமி நாசினி தெளிக்கும் சுகாதார பணியாளர்கள்

இந்நிலையில் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, முக்கிய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மருத்துவ தயாரிப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ள உடனடியாக ரூ.150 கோடி நிதியுதவி அளிக்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப் அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் 3 தினங்களுக்கு முன்பாகவே அனைத்து அரசு போக்குவரத்து சேவைகளையும் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.