23 ஆண்டு வரலாற்றில் முதல் முறை… செரீனாவுக்கு மோசமான தோல்வி!

 

23 ஆண்டு வரலாற்றில் முதல் முறை… செரீனாவுக்கு மோசமான தோல்வி!

டெல்லி: 1995ல் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக களமிறங்கி, கடந்த 23 ஆண்டுகளாக கொடிக்கட்டி பறந்து வரும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தனது வாழ்க்கையில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று, அதிக பட்டங்கள் வென்றவராக உள்ளார். 36 வயதாகும் செரீனா, குழந்தை பிறந்த பிறகும் களத்தில் இறங்கி கலக்கி வருகிறார்.
சமீபத்தில் நடந்த விம்பிள்டன் போட்டியில் பைனல் வரை நுழைந்து அசத்தினார். பைனலில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரிடம் தோல்வியடைந்தார்.   powered by Rubicon Project ஆனால், தனது 23 ஆண்டுகால டென்னிஸ் வரலாற்றில் மிகவும் மோசமான தோல்வியை செரீனா தற்போது சந்தித்துள்ளார். சிலிகான் வேலி கிளாசிக் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஜோகன்னா கோண்டாவிடம் 6-1, 6-0 என்ற செட்களில் செரீனா தோல்வியடைந்தார். முதல் கேமை வென்ற அவர் அதன்பிறகு, தொடர்ந்து 12 கேம்களில் தோல்வியடைந்துள்ளார். ஒரு போட்டியில் குறைந்த பட்சம் 2 கேம்களிலாவது செரீனா வென்றுள்ளார். முதல் முறையாக ஒரு கேமில் மட்டும் வென்று தோல்வியடைந்துள்ளார். அடுத்த மாதம் சின்சினாட்டி ஓபன் மற்றும் அதைத் தொடர்ந்து யுஎஸ் ஓபன் போட்டிகளில் செரீனா பங்கேற்க உள்ளார்.