23 ஆண்டுகால சாதனையை முறியடித்த ‘ஹிட்மேன்’ ரோஹித்!!

 

23 ஆண்டுகால சாதனையை முறியடித்த ‘ஹிட்மேன்’ ரோஹித்!!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்து உள்ளார் ஹிட்மேன் ரோகித் சர்மா.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்து உள்ளார் ஹிட்மேன் ரோகித் சர்மா.

டெஸ்ட் அரங்கில் கடந்த சில வருடங்களாக நடுவரிசையில் இறக்கப்பட்டு வந்த ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறக்க மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின்போது ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது இவரை துவக்க வீரராக களம் இறக்கப் படவில்லை. 

மாறாக, ஐந்தாவது அல்லது ஆறாவது வீரராகவே களமிறங்கி வந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக, “வருகின்ற தொடரில் ரோகித் சர்மா துவக்க வீரராக களம் இறங்குவார்” என பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். 

அதேபோல, முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் முதல் இன்னிங்சில் 176 ரன்கள் அடித்தார். துரதிஸ்டவசமாக, இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும் இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் ஆடிய ரோகித் சர்மா நிதானமாக ஆடி சதம் அடித்தார். இம்முறை 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

Rohit Sharma

இப்போட்டியில் மொத்தம் 33 பவுண்டரிகளையும் 13  சிக்ஸர்களையும் இவர் விளாசி இருக்கிறார். மொத்தம் 303 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 23 வருட சாதனையை தகர்த்தெறிந்துள்ளார். அதாவது ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் 1996 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 12 சிக்சர்கள் அடித்தது அதிகபட்சமாக இருந்தது. தற்போது இதனை தான் ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.