எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைந்திருக்கும் சாதகமான அம்சம்

 

எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைந்திருக்கும் சாதகமான அம்சம்

தொடர்ந்து 10 ஆண்டுகளாக திமுக முடங்கிப்போயிருப்பதால் எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் எப்படி நிறைவேற்ற முடியும் என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வருகிறார் ஸ்டாலின். ஆனால், ஒவ்வொரு திட்டத்தையும் எப்படி நிறைவேற்ற முடியும்? அது சாத்தியமா? என்று பல கட்ட ஆலோசனைக்கு பின்னரே அறிவிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார் நம்மிடம் பேசிய அந்த மூத்த அரசியல் விமர்சகர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைந்திருக்கும் சாதகமான அம்சம்

40 ஆண்டுகால பத்திரிகை அனுபவவிக்க அவரிடம் மேலும் நாம் பேசியதிலிருந்து, இந்த தேர்தலுடன் திமுகவுக்கு முடிவுகட்டி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருப்பது தெரிகிறது.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதது ஒரு பக்கம் இருந்தாலும், 2011 தேர்தலில் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டு எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கூட இழந்து நின்றது திமுக. இந்த தேர்தலை விட்டால் கட்சி காணாமல் போய்விடும் என்றுதான், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று ஒரே விளம்பரமயமாகவே இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைந்திருக்கும் சாதகமான அம்சம்

கடைசி நேரத்திலாவது மக்களை எப்படியாவது தன் பக்கம் திருப்பிவிடலாமென்று ஸ்டாலின் எடுத்த அஸ்திரம்தான் தேர்தல் அறிக்கை. அவர் நினைத்தது போலவேதான் மக்களும் அவர் பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்தினார்கள். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டதும், ஸ்டாலின் பக்கம் கொஞ்சம் கவனத்தை திருப்பியிருந்த மக்களும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே கவனம் வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார் அந்த மூத்த பத்திரிகையாளர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைந்திருக்கும் சாதகமான அம்சம்

தேர்தல் அறிக்கை என்றில்லாமல், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் ரத்து, 6 பவுனுக்கு கீழே உள்ள நகைக்கடன் ரத்து, விவசாயிகளுக்கு மும்முனை மின்சார திட்டம் என அவர் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களுக்கெல்லாம் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு. இது தவிர அரசு ஊழியர்கள், இளம் வாக்காளர்கள் மத்தியிலும் எடப்பாடிக்கு ஜே ! என்ற நிலைதான் காணப்படுகிறது என்கிறார் அவர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைந்திருக்கும் சாதகமான அம்சம்

இன்னொன்றையும் முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றார் அவர். பொதுவாக எந்த ஒரு ஆளும் கட்சியும் தேர்தலை சந்திக்கும்போது, அந்த ஆட்சிக்கு எதிரான மனோபாவம் மக்களிடையே அதிகமாக காணப்படும். ஆனால், 10 ஆண்டு காலம் அதிமுக தொடர்ந்து ஆட்சியில் உள்ளபோதிலும் அரசுக்கு எதிரான அலை எதுவும் மக்களிடையே காணப்படவில்லை. இதுவே எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைந்திருக்கும் மிகவும் சாதகமான அம்சம்’’ என்றார்.