அமைச்சரின் காரை ஊருக்குள் விட மறுத்த பெண்கள்

 

அமைச்சரின் காரை ஊருக்குள் விட மறுத்த பெண்கள்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முறையும் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்யிடுகிறார். இதையடுத்து அவர் தொகுதிக்குட்பட்ட தாடிக்கொம்பு சாலையில் 1வது வார்டுக்கு உட்பட்ட பாலதிருப்பதியில் பிரச்சாரம் செய்ய வந்தார்.

அமைச்சரின் காரை ஊருக்குள் விட மறுத்த பெண்கள்

அப்போது அமைச்சர் காரை வழிமறித்த பெண்கள், போன முறை ஓட்டு கேட்டுவந்த நீங்க அதன்பின்னர் இப்போதுதான் வர்றீங்க. குடிநீர் வசதி இல்லை, சாலை வசதி இலை, கழிவுநீர் வசதி இல்லை, தெருவிளக்குகளும் எதுவுமில்லை. அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் எதற்கு வந்தீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அமைச்சர் காரை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டார்.

அய்யங்குளம் பகுதியிலும் அமைச்சருக்கு எதிர்ப்பு எழுந்தது. 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் வீடுகளை அதிகாரிகள் காலி செய்யச்சொல்வதாக கூறி அமைச்சரின் காரை முற்றுகையிட்டனர். அமைச்சர் அவர்களை சமாதானம் செய்துவிட்டு திரும்பி சென்றார்.

இரண்டு சம்பவங்களாலும் அமைச்சருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.