சட்டை போட்டுக்கொண்டு வந்தால் தான் சட்டமன்றத்திற்குள் விடுவேன் – எம்.எல்.ஏவை விரட்டி அடித்த சபாநாயகர்

சட்டை போட்டுக்கொண்டு வந்தால் தான் சட்டமன்றத்திற்குள் விடுவேன் – எம்.எல்.ஏவை விரட்டி அடித்த சபாநாயகர்

டீ-சர்ட்டில் வந்து சலசலப்பை ஏற்படுத்தியதால் சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் எம்.எல்.ஏ. குஜராத் சட்டமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சட்டை போட்டுக்கொண்டு வந்தால் தான் சட்டமன்றத்திற்குள் விடுவேன் – எம்.எல்.ஏவை விரட்டி அடித்த சபாநாயகர்

குஜராத்தில் சம்நாத் தொகுதியினெம்.எல்.ஏ. விமல் சுதாசமா, நேற்று டீ.சர்ட் அணிந்து சட்டபேரவைக்கு வந்ததால் அவைக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த சபாநாயகர், ஏற்கனவே ஒரு முறை இப்படி டீசர்ட் அணிந்து வந்ததால், பேரவையின் மாண்பை காக்கும் வகையில் குர்தா அல்லது சட்டை அணிந்து வர வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அப்படி இருந்தும் மீண்டும் அப்படியே வந்திருக்கிறீர்கள். அதனால் சென்று குர்தா அல்லது சட்டைஅணிந்து வாருங்கள் என்றார்.

உடனே காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து, இந்த ஆடையைத்தான் அணிந்து வர வேண்டுமென்ற எந்த விதியும் இல்லை. அதனால் விமலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்றனர்.

சட்டை போட்டுக்கொண்டு வந்தால் தான் சட்டமன்றத்திற்குள் விடுவேன் – எம்.எல்.ஏவை விரட்டி அடித்த சபாநாயகர்

டீசர்ட் அணிந்துதான் பிரச்சாரம் செய்தேன். ஜெயித்தேன். அப்படி இருக்கும்போது டீ சர்ட் போட்டுவரக்கூடாது என்று சொன்னால் நீங்கள் என்னை தாக்கும் விதமாக வாக்களார்களை தாக்குகிறீர்கள் என்று சொன்னார்.

உடனே சபாநாயகர், ‘’இது விளையாட்டு மைதானம் கிடையாது . இங்கே பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் நிறைய உள்ளன’’ என்று கூறினார்.

விவாதம் வலுத்துக்கொண்டே சென்றதால், விமலை அவையை விட்டு வெளியேற்றும்படி உத்தரவிட்டார் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி. உடனே காவலர்கள் ஓடிவந்து விமலை பிடித்து இழுத்து சென்று அவைக்கு வெளியே விட்டு சென்றனர்.

இதனால் சட்டப்பேரவையில் சில மணி நேரம் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது