லீக் ஆன வேட்பாளர் லிஸ்ட் : ரங்கசாமியின் காரை வழிமறித்து தர்ணா

 

லீக் ஆன வேட்பாளர் லிஸ்ட் : ரங்கசாமியின் காரை வழிமறித்து தர்ணா

வேட்பாளர் பட்டியல் லீக் ஆகிவிட்டதாக கூறி, ரங்கசாமியின் காரை வழிமறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் அவரது கட்சியினர்.

லீக் ஆன வேட்பாளர் லிஸ்ட் : ரங்கசாமியின் காரை வழிமறித்து தர்ணா

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரசும் பாஜகவும் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன. இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கான தொகுதிகள் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் இதுவரைக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அப்படி இருக்கும்போது மண்ணடிப்பட்டு தொகுதியை கூட்டணி கட்சிக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஒதுக்கிவிட்டதாக செய்தி பரவியது. இதனால் கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, கதிர்காமம் பகுதியில் இருக்கும் கோயிலுக்கு பூஜை செய்ய சென்றார். அவரது வருகையை தெரிந்துகொண்ட கட்சி தொண்டர்கள், ரங்கசாமியின் கரை வழிமறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.