ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளருக்கு அமீர்,சேரன் ஆதரவு

 

ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளருக்கு அமீர்,சேரன் ஆதரவு

ஆயிரம் விளக்குதொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் வெற்றிபெற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இயக்குநர்கள் அமீர், சேரன், கரு.பழனியப்பன் முதலானோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளருக்கு அமீர்,சேரன் ஆதரவு

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கியிருப்பவர் டாக்டர் எழிலன். கருணாநிதியின் தனி மருத்துவராக இருந்தவர் டாக்டர் எழிலன். பேராசிரியர்கள் மு.நாகநாதன் – ஜமதக்னி சாந்தி ஆகியோரின் மகன். கருணாநிதியின் நண்பராகவும், முன்னாள் திட்டக்குழு துணைத்தலைவராக இருந்தவர் மு.நாகநாதன்.

ஆயிரம் விளக்கு தொகுதியின் தேனாம்பேட்டை பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு இரவு நேர இலவச கிளினிக் நடத்தி வரும் எழிலன், சிக்கன் குனியா, டெங்கு பேரிடர் காலங்களில் எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார் எழிலன்.

இத்தொகுதியில் எழிலனை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு களமிறக்கப்பட்டுள்ளார்.

ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளருக்கு அமீர்,சேரன் ஆதரவு

ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் திமுகவிற்கு ஆதரவா? அதிமுகவிற்கு வாய்ப்பா? மூன்றாவது அணிக்கு வாக்கா? உள்ளிட்ட கேள்விகளை டாப் தமிழ் நியூஸ் சர்வேயில்முன்வைத்தார். கேள்வி கேட்கும் முன்னரே ஸ்டாலின் தான் திமுக தான் என வாய் நிறைய கூறுகிறார்கள். அந்த அளவிற்கு திமுகவின் கோட்டையாக ஆயிரம் விளக்கு மாறியிருக்கிறது என்று சொல்கிறது சர்வே முடிவுகள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், செய்தி தொடர்பாளர் வன்னி அரசுஆகியோரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். எழிலனுக்கு திரைப்பட இயக்குநர்கள் சேரன், அமீர், கரு.பழனியப்பன், நடிகர் பொன்வண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அந்த போட்டோவை வெளியிட்டு, ‘’நாங்க ரெடி’’ என்று தெரிவித்துள்ளார் எழிலன்.