திருவாரூரா?நாகப்பட்டினமா?- உளறிக்கொட்டிய ஸ்டாலின்

 

திருவாரூரா?நாகப்பட்டினமா?- உளறிக்கொட்டிய ஸ்டாலின்

மேடையில் பேசும்போது குறிப்பு உதவிக்காக ஸ்டாலின் துண்டு சீட்டு வைத்திருப்பதால், அவரை துண்டு சீட்டு என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். அப்படி துண்டு சீட்டு வைத்திருந்தும் ஒவ்வொரு விசயத்தையும் மாற்றி பேசி உளறி கொட்டுவதால், உளறல்மன்னன் ஸ்டாலின் என்று முகநூலில் தனி பக்கங்களே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஸ்டாலினுன் தொடர்ந்து உளறிக்கொட்டி வருகிறார்.

திருவாரூரா?நாகப்பட்டினமா?- உளறிக்கொட்டிய ஸ்டாலின்

தற்போதும் அவர், தனது தந்தை பிறந்த திருக்குவளை நாகப்பட்டினத்தில் உள்ளது என்று உளறியிருக்கிறார். ’’முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்திலிருந்து எனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளேன்.

திருவாரூரா?நாகப்பட்டினமா?- உளறிக்கொட்டிய ஸ்டாலின்

பாஜக – அதிமுக கூட்டணியால் பாழ்பட்டுவிட்ட தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற துடிப்பு ஆர்ப்பரிக்கும் மக்களின் ஒவ்வொரு குரலிலும் எதிரொலிக்கிறது!
சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்! ’’ என்று தெரிவித்திருக்கிறார்.

திருவாரூரா?நாகப்பட்டினமா?- உளறிக்கொட்டிய ஸ்டாலின்

இதுகுறித்து தமிழக பாஜக பிரமுகர் காயத்ரிரகுராம், ‘’சுதந்திர தினமும் குடியரசு தினமும் தான் தெரியாதுன்னா பார்த்தா அவங்க அப்பா பிறந்தது எந்த மாவட்டம்னே தெரியலை!. நாகை மாவட்டத்துல இருக்கும் திருக்குவளையை, திருவாரூர் மாவட்டத்தில் இருக்குன்னு சொல்ற இவர் தான் தமிழ் நாட்டுக்கு விடியலை தர போறாராம்!நல்லா பார்த்துக்கோங்க….’’என்று கமெண்ட் அடிக்கிறார்.