’’மீன் பிடிக்காதேன்னு அதானி சொல்றான்; விவசாயம் செய்யாதேன்னு அம்பானி சொல்றான்’’

’’மீன் பிடிக்காதேன்னு அதானி சொல்றான்; விவசாயம் செய்யாதேன்னு அம்பானி சொல்றான்’’

சென்னை அடுத்த மீஞ்சூரில் அமைந்திருக்கும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு அதானியின் துறைமுக நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

’’மீன் பிடிக்காதேன்னு அதானி சொல்றான்; விவசாயம் செய்யாதேன்னு அம்பானி சொல்றான்’’

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் தேசிய நீர் வழித்த அலுவலக இயக்குநருக்கு இந்த கோரிக்கை கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

’’மீன் பிடிக்காதேன்னு அதானி சொல்றான்; விவசாயம் செய்யாதேன்னு அம்பானி சொல்றான்’’

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கத் திட்டத்தினால் பழவேற்காட்டில் மீன்வளம் அழிந்துவிடும் என்றும், துறைமுகத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் நடமாட தடைவிதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த துறைமுக விரிவாக்கம் விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள் என பலரின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்று பலரும் அதற்கு எதிராக போராடி வரும் நிலையில், இவர்கள் எல்லாம் சொன்னது மாதிரியே மீன் பிடிக்க கூடாது என்று மிரட்ட தொடங்கி இருக்கும் அதானி குறித்து,

’’மீன் பிடிக்காதேன்னு அதானி சொல்றான்; விவசாயம் செய்யாதேன்னு அம்பானி சொல்றான்’’

‘’மீன்பிடிக்காதேன்னு அதானி சொல்றான். விவசாயம் செய்யாதேன்னு அம்பானி சொல்றான். இந்த ரெண்டு பேரும் வளர்ரதுக்கு உதவி செய்யுங்கஜீன்னு பிஜேபி சொல்லுது. இவங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? நம்ம ஊர்ல நாட்டாமை செய்யரதுக்கு இவங்க யாரு?’’ என்று கேட்கிறார் மே – 17இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.