பாலியலாக சீண்டிய பொறுக்கியை எதிர்த்து அடிக்கும் மாணவியை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? திருமுருகன் காந்தி

பாலியலாக சீண்டிய பொறுக்கியை எதிர்த்து அடிக்கும் மாணவியை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? திருமுருகன் காந்தி

தன்னை பாலியலாக சீண்டிய பொறுக்கியை எதிர்த்து அடிக்கும் இம்மாணவியை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? என்று கேட்கிறார். மே – 17இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.

பாலியலாக சீண்டிய பொறுக்கியை எதிர்த்து அடிக்கும் மாணவியை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? திருமுருகன் காந்தி

பள்ளி மாணவி ஒருவர் இரண்டு இளைஞர்களை நடுரோட்டில் வைத்து பிரம்பினால் அடித்து துவைக்கிறார். மீரட்டில் நடந்த இந்த சம்பவம் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளி செல்லும் மாணவிகளை தினமும் இரண்டு இளைஞர்கள் பைக்கில் பின் தொடர்ந்து சென்று சேட்டைகள் செய்து வந்துள்ளனர். அன்றைக்கும் அவ்வாறே அந்த இளைஞர்கள் செய்ய திடீரென்று ஒரு மாணவி பைக்கின் முன்னால் சென்று மறித்தார். பயந்து போய் ஓடிவிடுவார்கள் என்று நினைத்த இளைஞர்கள் மிரண்டு போய் பைக்கை நிறுத்துவிட்டு இறங்கினார்கள். அங்கிருந்த ஒரு பிரம்பினை எடுத்து அந்த மாணவர்களை இனிமேல் இப்படி செய்வீயா என்று கேட்டப்படியே அடித்தார். அதற்குள் பொதுமக்களும் அங்கே கூடிவிட்டனர். விசயமறிந்த அவர்கள் அப்படித்தான் நல்லா அடி என்று ஊக்கம் கொடுக்க உற்சாகத்தில் அந்த மாணவியும் அடித்து வெளுத்து விட்டார்.

பாலியலாக சீண்டிய பொறுக்கியை எதிர்த்து அடிக்கும் மாணவியை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? திருமுருகன் காந்தி

அதற்குள் சம்பவத்தைக் கேள்விபட்டு போலீசாரும் அங்கு வந்தனர். மாணவியிடம் இருந்த பிரம்மினைப் பிடுங்கி அவர்களும் இளைஞர்களை அடித்தனர். இனிமேல் அப்படி செய்யமாட்டேன் என்று அலறிய அந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அந்த இளைஞர்கள் மீரட்டின் கன்கேர்கேரா பகுதியைச் சேர்ந்த சுபம் குமார் மற்றும் அருண் மெஹந்தி எனத் தெரியவந்தது.
மாணவியின் துணிச்சலைப் பாராட்டி சமூக வளைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மே – 17இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “தன்னை பாலியலாக சீண்டிய பொறுக்கியை எதிர்த்து அடிக்கும் இம்மாணவியை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? என்று கேட்டவர்

‘ரேப் செய்தவனை திருமணம் செய்’, ‘சக அதிகாரியை சீண்டும் போலிஸ் அதிகாரியை கைது செய்யாதே’ என்பவை நடக்கும் நாட்டில் இப்படியான பெண்களே நமக்கான நம்பிக்கை என்கிறார்.