தொகுதி மாறி போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்

 

தொகுதி மாறி போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக – திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அதிமுகவில் 3 பேரும், திமுகவில் 7 பேரும் தொகுதி மாறி போட்டியிடுகிறார்கள் என்கிற விபரம் தெரியவருகிறது.

தொகுதி மாறி போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்

கடந்த இடைத்தேர்தலின்போது அரவக்குறிச்சியில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி இந்த முறை கரூரில் போட்டியிடுகிறார். மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட கோ.தளபதி மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

அரியலூரில் போட்டியிட்ட சிவசங்கர், இந்த முறை குன்னம் தொகுதியில் போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றத்தில் கடந்த முறை போட்டியிட்ட மணிமாறன் இந்த முறை திருமங்கலத்தில் போட்டியிடுகிறார்.

கே.வி.குப்பம் தனி தொகுதியில் போட்டியிட்ட வி.அமலுக்கு இந்த முறை குடியாத்தம் தனி தொகுதியில் போட்டியிடுகிறார். திருப்பூர் வடக்குதொகுதியில் போட்டியிட்ட சாமிநாதன், இந்த முறை காங்கேயம் தொகுதியில் போட்டியிடுகிறார். தளி தொகுதியில் போட்டியிட்ட ஓய் .பிரகாஷ், ஓசூரில் போட்டியிடுகிறார்.

2011 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி இந்த முறை சைதாப்பேட்டையில் போட்டியிடுகிறார். கடந்த முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திரபாலாஜி இந்த முறை ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார்.

மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ராஜன் செல்லப்பா தற்போது திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகிறார்.