வாக்கிங் நண்பருக்கு எல்லாம் சீட்டு: கருணாநிதி பாணியில் ஸ்டாலின்

 

வாக்கிங் நண்பருக்கு எல்லாம் சீட்டு: கருணாநிதி  பாணியில் ஸ்டாலின்

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில் , தனித்து 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக. அத்துடன் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து உதய சூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

வாக்கிங் நண்பருக்கு எல்லாம் சீட்டு: கருணாநிதி  பாணியில் ஸ்டாலின்

173 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை நேற்று 12.3.2021ல் அறிவித்தார் ஸ்டாலின். முன்னதாக அவர், கோபாலபுரம் சென்று கருணாநிதி படத்தின் முன்பு வேட்பாளர்கள் பட்டியலை வைத்து வணங்கினார் ஸ்டாலின். அதன் பின்னர், மெரினா சென்று அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர்களை வைத்து வணங்கிய ஸ்டாலின், பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் நா. எழிலன் களமிறங்குகிறார் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

வாக்கிங் நண்பருக்கு எல்லாம் சீட்டு: கருணாநிதி  பாணியில் ஸ்டாலின்

இதுகுறித்து, ’’கட்சிக்கு எந்த தியாகமும் செய்யாமல் தனது வாக்கிங் நண்பர் என்பதால் நாகனாதனுக்கு சீட் வழங்கினார் கருணாநிதி. இன்று அவரது மகன் எழிலனுக்கு அதே பாணியில் ஸ்டாலின் ஆயிரம் விளக்கில் சீட் வழங்கியுள்ளார்.

இந்து மதத்தை அவமதிப்பதையே தொழிலாக கொண்டு,.எந்த மேடையில் பேசினாலும் இந்து மதத்தை இழிவு படுத்தியே பேசி வரும் எழிலனுக்கும் அவரை தேர்தலில் நிறுத்தி தனது இந்து விரோத எண்ணத்தை வெளிபடுத்திய
ஸ்டாலினுக்கும் இந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து ஆயிரம் விளக்கிலும் தமிழகம் முழுவதிலும் திமுகவை தோற்கடிப்பதன் மூலம் இந்து விரோத திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்’’என்று தெரிவித்துள்ளார் தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம்.