Home அரசியல் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிவிட்டு கண்ணீர் வடிக்கும் தேமுதிகவினர்

பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிவிட்டு கண்ணீர் வடிக்கும் தேமுதிகவினர்

’இன்றைக்குத்தான் தீபாவளி’ என்று அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதும் தேமுதிகவினர் பட்டாசு வெடித்தனர். இனிப்புகள் வழங்கினர். அதன்பின்னர் அவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிவிட்டு கண்ணீர் வடிக்கும் விந்தை நிகழ்வு ஏன்?

பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிவிட்டு கண்ணீர் வடிக்கும் தேமுதிகவினர்
பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிவிட்டு கண்ணீர் வடிக்கும் தேமுதிகவினர்

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலவியது. ஒரு கட்டத்தில் தொகுதி பங்கீடு மோதல் அதிகரிக்க, கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறியது தேமுதிக. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்கவில்லை. அதன்பின் அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் அங்கேயும், தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது என்று கூறுகிறார்கள். இதனால் தனித்துப் போட்டியிட தேமுதிக முடிவுசெய்திருக்கிறது.

பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிவிட்டு கண்ணீர் வடிக்கும் தேமுதிகவினர்

தேமுதிகவை வைத்துதான் அதிமுகவும் திமுகவும் கூட்டணியை இறுதிசெய்யும். அதனால் தேமுதிகவின் மனநிலை தெரியும் வரைக்கும் பத்திரிகைகள், டிவிக்களில் எங்கெங்கும் விஜயகாந்த்தான் நீக்கமற நிறைந்திருப்பார். என்னைய வச்சுத்தான் நியூஸ் பேப்பர், நியூஸ் சேனல் எல்லாம் ஓடிக்கிட்டிருக்குது என்று கூட விஜயகாந்த் பெருமைப் பட்டுக்கொண்டார். அந்த காலம் எல்லாம் மலையேறிப்போய்விட்டது. ஆனால், பிரேமலதாவும் சுதீஷும் அந்த காலத்தில் வாழ்ந்ததை போலவே இப்போது கனவில் மிதக்கிறார்கள் என்கிறார்கள் அக்கட்சியினரே.

பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிவிட்டு கண்ணீர் வடிக்கும் தேமுதிகவினர்

தலைவருக்கு அன்றைக்கு ஆளுமை அப்படி. அதனால்தான் அவர் நாக்கை துருத்தினார். அதற்காக அவர் பிள்ளையும் இப்படி வீராவேசம் பேசினால் எப்படி? 30வயதுதான் ஆகுது தலைவர் பையனுக்கு. என்னதான் இருந்தாலும், எடப்படி பழனிச்சாமியை இந்த அளவுக்கு மோசமாக அந்த பையன் திட்டியிருக்க கூடாது. இந்த வயசுலேயே மூத்த தலைவர்களை இப்படிஒருமையில் பேசுகிறாரே என்று அதிருப்தி ஏற்படிருக்கிறது. வீராவேசம் காட்டுவதை எல்லாம் விட்டுவிட்டு, அதிமுகவோடு ஒழுங்காக உட்கார்ந்து பேசியிருந்தால் அவர்கள் அதிக இடங்கள் கொடுத்திருப்பார்கள். அதை செய்யவில்லை. 2016ல் கிங்காக இருக்கணுமா? கிங் மேக்கராக இருக்கணுமா? என்று தவறான முடிவினை எடுத்தா தலைவர் விஜயகாந்த். அதே மாதில் 2021ம் ஆண்டிலும் தவறான முடிவினை எடுத்துவிட்டார்கள். இதனால் என்ன ஆகும் என்று தலைமைக்கே தெரியும். தொண்டர்கள் எங்களுக்கு தெரியாதா என்ன?

பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிவிட்டு கண்ணீர் வடிக்கும் தேமுதிகவினர்

தலைமை சொன்னதற்காக, தலைமையை மதித்து அதிமுகவை விட்டு வெளியேறுகிறோம் என்று சொன்னவுடன் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினோம். ஆனால், அதன்பிறகு தொண்டர்கள் எவ்வளவு மன உளைச்சலில் இருக்கிறார்கள், புலம்பி தவிக்கிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள் என்பதை எல்லாம் தலைமை உணரவேண்டும் என்கிறார்கள் மணப்பாறை மற்றும் ஆவடி தொகுதி தேமுதிகவினர்.

பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிவிட்டு கண்ணீர் வடிக்கும் தேமுதிகவினர்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மதுபோதையில் பணிக்கு வந்த மருந்தாளுநருக்கு மெமோ… திண்டுக்கல் அரசு மருத்துமனை அதிரடி!

திண்டுக்கல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்க வந்தவரிடம் மதுபோதையில் தகராறு செய்த மருந்தாளுநருக்கு, மெமோ வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி...

ஸ்டாலினிடம் அற்புதம்மாள் வைத்த திடீர் கோரிக்கை!

சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை...

உணவின்றி தவிப்பவர்களின் பசியாற்றும் சகோதரர்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடுகிறது. பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 10ம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் பலர்,...

எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!

எழுத்தாளர் கி.ரா. உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். கி.ரா. உடலுக்கு சொந்த ஊரான தூத்துக்குடி கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவலில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் பிற்பகல்...
- Advertisment -
TopTamilNews