புல்வாமா தாக்குதலால் பிரிந்த கணவன் – மனைவிகள் மீண்டும் இணைந்தனர்

 

புல்வாமா தாக்குதலால் பிரிந்த கணவன் – மனைவிகள் மீண்டும் இணைந்தனர்

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் கடந்த 2019ல் நடந்த பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்த அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

புல்வாமா தாக்குதலால் பிரிந்த கணவன் – மனைவிகள் மீண்டும் இணைந்தனர்

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது.

புல்வாமா தாக்குதலுக்கு முன்னதாக, ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திர சிங் என்ற இளைஞர், பாகிஸ்தானை சேர்ந்த ஜகான் கன்வார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதேபோல், நேபால் சிங் பாட்டி என்பவர் கைலாஷ் பாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். எல்லையோரம் வசிக்கும் இரு நாட்டை சேர்ந்தவர்களுக்குள் திருமணம் நடப்பது வழக்கம்தான். ஆனால் இவர்கள் திருமணம் செய்த நேரம் இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுவிட்டது.

புல்வாமா தாக்குதலால் பிரிந்த கணவன் – மனைவிகள் மீண்டும் இணைந்தனர்

இதனால் மணமக்கள் பிரிய நேர்ந்தது. மணமகள்கள் இருவரும் பாகிஸ்தானிலேயே கடந்த 2 ஆண்டுகள் கழித்தனர். நிலைமை தற்போது மாறியிருப்பதால் அவர்கள் இந்தியா வருவதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது. இதையத்து இரண்டு பெண்களும் வாகா எல்லை வழியாக இந்தியா வந்து கணவர்களுடன் இணைந்தனர்.

திருமணம் முடிந்த கையோடு பிரிந்ததால் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலை இருந்தது . இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.