ஸ்டாலின் வெளியிட்டது ஐபேக் கொடுத்த பட்டியல் கிடையாது… கொதிக்கும் உ.பி.க்கள்

 

ஸ்டாலின் வெளியிட்டது ஐபேக் கொடுத்த பட்டியல் கிடையாது… கொதிக்கும் உ.பி.க்கள்

அந்த ‘தில்’இவங்களிடம் ஏன் இல்லை என்று திமுக தலைமையை நினைத்து கொதிக்கிறார்கள் உ.பி.க்கள். திமுக வேட்பாளர்கள் பட்டியலை பார்த்துவிட்டுத்தான் அவர்கள் இப்படி கொதிக்கிறார்கள்.

ஸ்டாலின் வெளியிட்டது ஐபேக் கொடுத்த பட்டியல் கிடையாது… கொதிக்கும் உ.பி.க்கள்

‘’இந்த பட்டியலை தயாரிக்கறதுக்கு எதுக்கு 350 கோடி கொடுத்து ஐபேக்கை ஒப்பந்தம் செய்யணும்? பேசாம, அறிவாலயத்து வாட்ச்மேனிடம் கேட்டிருந்தால் கூட, அவரே தந்திருப்பாரே’’ என்று எரிச்சலடைகிறார்கள் உ.பிக்கள்.

கடந்த 10 ஆம் தேதி அறிவிக்கப்படுவதாக சொல்லப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியல் இன்றுதான் வெளியிடப்பட்டது. ’பட்டியல் தயாரிப்பில் குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் சீனியர்களின் தலையீடு கொஞ்சமும் இருக்காது. ஐபேக் தரும் அறிக்கையை வைத்து முழுக்க தகுதி அடிப்படையிலேயே வேட்பாளர் தேர்வு இருக்கும். இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும்’ என்றெல்லாம் கதையளக்கப்பட்டது. ஆனால், ஸ்டாலின் இன்று வெளியிட்டிருக்கும் பட்டியலோ அவர் இதனை நாளும் சொன்னதற்கு நேரெதிராக இருக்கிறது.

ஸ்டாலின் வெளியிட்டது ஐபேக் கொடுத்த பட்டியல் கிடையாது… கொதிக்கும் உ.பி.க்கள்

இது பற்றி நம்மிடம் பேசிய உ.பிக்கள் சிலர், இத்தனை இழுத்தடித்துக்கொண்டே போனதால், ரொம்ப வடிகட்டி எடுத்து வேட்பாளர்களை நிறுத்தப்போகிறார் தலைவர் என்றுதான் எதிர்பார்த்திருந்தோம். ஐபேக் சர்வேயின்படி வேகாத பழைய ஆட்களை எல்லாம் நீக்கிவிட்டு, துடிப்பான இளையோரை அதிகமாக களமிறக்குவார் என்று என்ற எதிர்பாப்பில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார் தலைவர். இது ஐபேக் கொடுத்த லிஸ்ட்தானா? இல்லைஅதை தூக்கி எறிந்துவிட்டு இவர்களாகவே புதிதாக தயாரித்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. தெற்கே சுரேஷ் ராஜனில் தொடங்கி ஆவுடையப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன், நேரு, பொன்முடி, எ.வ. வேலு, துரைமுருகன், தா.மோ அன்பரசன் என்று ஊருக்கு ஊர் பழம் பெருச்சாளிகளையே போட்டிருக்காங்க என்றும் சொல்லும் அவர்கள்,

ஸ்டாலின் வெளியிட்டது ஐபேக் கொடுத்த பட்டியல் கிடையாது… கொதிக்கும் உ.பி.க்கள்

ஒழுங்கா நடக்க முடியாத சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கெல்லாம் சீட் கொடுத்திருக்கும் கொடுமையை எங்கே போய் சொல்றது என்றே தெரியவில்லை.
மாறி மாறி இந்த மாதிரி ஆட்களுக்கே கொடுத்தால் மற்ற கட்சிக்காரங்களோட நிலை என்னவாகுறது. மொத்தத்தில் திமுக வாரிசு கட்சிதான்னு அழுத்தமா சொல்லியிருக்குது இந்த வேட்பாளர் பட்டியல் என்கிறார்கள்.

அதிமுகவில் 3 அமைச்சர்கள் உட்பட சுமார் 35 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு கல்தா கொடுத்திருக்காங்களே. அந்த’தில்’ இவங்களிடம் ஏன் இல்லை’’
என்றும் கேட்கிறார்கள்.

இன்று வெளியிடப்பட்ட திமுக வேட்பாளர்கள் பட்டியல் ஐபேக் பட்டியல்தானா என்று எழும் கேள்வுகள் குறித்து ஐபேக் தரப்பில் விசாரித்தபோது, நாங்கள் கொடுத்த பட்டியல் இதுவல்ல. கடைசி நேரத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.