அம்பாசமுத்திரம்: போராடி வென்ற ஆவுடையப்பன்

 

அம்பாசமுத்திரம்: போராடி வென்ற ஆவுடையப்பன்

அஜய் படையப்பாவா? ஆவுடையப்பனா? என்று கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், கடும் போராட்டத்திற்கு பின்னர் அம்பாசமுத்திரத்தை கைப்பற்றியிருக்கிறார் ஆவுடையப்பன்.

அம்பாசமுத்திரம்: போராடி வென்ற ஆவுடையப்பன்

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சர்வே செய்து யாருக்கு சீட் கொடுக்கலாமென்று ஐபேக் டீம் ஒரு லிஸ்ட் எடுத்திருக்கிறது. அந்த லிஸ்ட்டில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேரை பரிந்துரை செய்திருக்கிறது ஐபேக். அப்படித்தான் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீனியரான ஆவுடையப்பன் பெயர் இடம்பெற்றிருந்தாலும், ஐந்து பேர்களில் முதலிடத்தில் இருந்தார் அஜய் படையப்பா.

அம்பாசமுத்திரம்: போராடி வென்ற ஆவுடையப்பன்

ஜமீன் குடும்பத்தை சேர்ந்த அஜய் படையப்பா, சென்னையில் பிரபல தொழிலதிபராக விளங்குகிறார். இவர், ‘அஜய் படையப்பா சேதுபதியார் அறக்கட்டளை’ எனும் சொந்த அறக்கட்டளை மூலமாக, அம்பாசமுத்திரம் தொகுதி மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வந்திருக்கிறார். மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஏராளமான நிதியுதவிகள் செய்திருக்கிறார்.

அதுவும் இந்த கொரோனா கொடுங்காலத்தில், ஆயிரக்கணக்கானோருக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான நிவாரண உதவிகள் செய்து வந்திருக்கிறார். 50 ஆயிரம் பேருக்கு 19 மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படியாக காப்பீட்டு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். பொங்கலை முன்னிட்டு, இஸ்லாமிய ஜமாத் அமைப்புகள், கிறிஸ்துவ அமைப்புகளை அழைத்து சமத்துவ பொங்கல் விழா நடத்தி 20 ஆயிரம் பேருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினார்.

அம்பாசமுத்திரம்: போராடி வென்ற ஆவுடையப்பன்

இப்படியான சேவைகளால் திமுகவினரிடையே மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒரு நபராக இருக்கிறார் அஜய் படையப்பா. கட்சி செல்வாக்கு இல்லாமல் தனிப்பட்ட முறையில் இத்தனை செல்வாக்குடன் இருக்கும் அஜய் படையப்பாவை ஐபேக் டீம் முதலிடத்தில் வைத்ததற்கு காரணமாம். ஆனால், அம்பாசமுத்திரத்தை குறி வைத்து காத்திருந்தவர் ஆவுடையப்பன். முன்னாள் சபாநாயகரும், கருணாநிதியின் நீண்டகால விசுவாசியும், ஸ்டாலினுக்கும் நெருக்கமானவராக இருப்பவர் ஆவுடையப்பன். ஆனாலும், அம்பாசமுத்திரம் திமுகவினரின் சாய்ஸ்- ஆக இருந்தது அஜய் படையப்பாதானாம்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அம்பாசமுத்திரத்தில் நிற்பது முடிவானது. அதனால் அவரை எதிர்த்து நின்று ஜெயிக்க வேண்டுமானால், அஜய் படையப்பாதான் சரியா நபர் என்று நினைத்தார்கள் அம்பை மக்கள்.

அம்பாசமுத்திரம்: போராடி வென்ற ஆவுடையப்பன்

ஸ்டாலின் மருமகன் சபரீசனின் சொந்த ஊரான அரியநாயகிபுரம் அம்பாசமுத்திரம் தொகுதியில்தான் வருகிறது என்பதால், அவரும் தொகுதி நிலவரம் பற்றி அதிகம் அறிந்து வைத்திருப்பதால் அஜய்க்கே சிபாரிசு செய்தர் என்றே தெரிகிறது.

அம்பாசமுத்திரம்: போராடி வென்ற ஆவுடையப்பன்

திமுக நேர்காணலில் ஆவுடையப்பனும், அஜய் படையப்பாவும் கலந்து கொண்டார்கள். நேர்காணலில் பேசியதை வைத்து பார்க்கும்போது, அஜய் படையாப்பாவையே ஸ்டாலின் டிக் செய்ய நூற்றுக்கு 95 சதவிகிதம் வாய்பிருப்பதாக சொன்னது அறிவாலயம் வட்டாரம்.

இதனால் அறிவாலயத்துடன் தொடர்ந்து மல்லுக்கட்டி வந்த ஆவுடையப்பன், இறுதியில் வென்றுவிட்டார்.