’’எனக்கென்று தனிக்கூட்டம்; தனி அணி..’’ஓபிஎஸ் மகன் பரபரப்பு பேச்சு

 

’’எனக்கென்று தனிக்கூட்டம்; தனி அணி..’’ஓபிஎஸ் மகன் பரபரப்பு பேச்சு

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஜெயபிரதீப், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கம்பம், வில்லிவாக்கம், கொளத்தூர் தொகுதிகளில் போட்டிட200க்கும் மேற்பட்ட விருப்பமனு தாக்கல் செய்தனர். கம்பத்தில் போட்டியிட விரும்பம் காட்டி வருகிறார் ஜெயபிரதீப் என்றும் தகவல் பரவியது. ஆனால், ஜெயபிரதீப் வேட்பாளர்கள் நேர்காணலில் பங்கேற்காமல் இருந்தார். ஆனாலும், கம்பத்தில் அவர்தான் போட்டியிடுகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், கம்பம் வேட்பாளர் சையதுகான் என்று அறிவிக்கப்பட்டுவிட்டார்.

’’எனக்கென்று தனிக்கூட்டம்; தனி அணி..’’ஓபிஎஸ் மகன் பரபரப்பு பேச்சு

அந்த தொகுதி முஸ்லீம்கள் அதிகமிருக்கும் தொகுதி என்பதால்தான் ஜெயபிரதீப் போட்டியிட பின்வாங்கிவிட்டார் என்றும், போடி தொகுதியில் வெற்றி பெறுவதே இந்த முறை ஓபிஎஸ்க்கு மிகவும் சவாலாக இருக்கும் என்பதால், அவருக்கு தீவிரமாக வேலைபார்க்க வேண்டும் என்றுதான் ஜெயபிரதீப் போட்டியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.

போட்டி கடுமையாக இருக்கும் என்று அதிமுக கணித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், வாரிசு அரசியல் புகாரும் எழலாம் என்பதால் ஜெயபிரதீப் ஒதுங்கிக்கொண்டதாகத் தெரிகிறது.

’’எனக்கென்று தனிக்கூட்டம்; தனி அணி..’’ஓபிஎஸ் மகன் பரபரப்பு பேச்சு

இதுகுறித்து ஜெயபிரதீப் விளக்கம் அளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ‘’நான் மனம் திறந்து சில கருத்துக்களை தங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். 1991ம் ஆண்டும் நான் 7 வயதில் அம்மாவின் பிரச்சாரத்தில் கொடு பிடித்து கலந்துகொண்டதில் இருந்து 30 வருடங்களாக கழக உண்மை தொண்டராக பணியாற்றி வருகிறேன். 2001ம் ஆண்டு முதல் கழக உறுப்பினராக 20 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். 2009ம் ஆண்டும் அம்மா வழங்கிய 16வது வார்டு இளைஞர் பாசறை செயலாளராக பணியாற்றி இருக்கிறேன்.

கடந்த 30 வருடங்களாக அம்மா அவர்களிடமும், கட்சி தலைவர்களிடமும், அமைச்சகள் பெருமக்களிடமும், கழக நிர்வாகிகளிடமும், எனக்கு பதவி தாருங்கள் என்று கேட்டது கிடையாது. கழக நண்பர்களிடமும், தொண்டர்களிடமும் எனது புகைப்படங்களை பதிவிட்டு எனக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டது கிடையாது. எனக்கென்று தனிக்கூட்டம்; தனி அணி என்று செயல்பட்டது கிடையாது. எந்த தேர்தலிலும் எனக்கென்று பதவிகேட்டு விருப்பமனு தாக்கல் செய்ததும் கிடையாது. எனக்கு நெருக்கமானவர்களின் அதிகாரத்தை ஒருமுறை கூட பயன்படுத்தியது இல்லை.

’’எனக்கென்று தனிக்கூட்டம்; தனி அணி..’’ஓபிஎஸ் மகன் பரபரப்பு பேச்சு

பொன்மனச்செம்மல் வகுத்துக்கொடுத்த கொள்கைகளின்படி, கழக பணிகளிலும் மக்கள் சேவையிலும் கவனம் செலுத்தி, மனநிறைவுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். ஒரு சாதாரண தொண்டரான என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்து, தமிழகம் முழுவதும் இருக்கும் எனது நண்பர்கள், கழக தொண்டர்கள், 200க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

தங்களின் அன்பையும், ஆசீர்வாதங்களையும் கண்டு, இப்பிறவியில் பிறந்த பயனை அடைந்துவிட்டேன். எனக்கு ஆதரவு அளித்தவர்களூக்கு நன்றியுடனும், நம்பிக்கையுடனும் இருப்பேன். என் வாழ்நாள் முழுவதும் அறம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவேன் என்று உறுதி அளிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.