தம்பி அஜீத்துக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்-சீமான்

 

தம்பி அஜீத்துக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்-சீமான்

வலிமை படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையே சென்னை ரைபிள் கிளப் சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் அஜித்குமார். அது தொடர்பான படங்கள் இணையங்களில் வெளியாகி வருவதால் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ஏங்கிக்கிடந்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். பயிற்சியை அடுத்து 46வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார் அஜித்குமார். தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி முடிந்து, போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற அஜித்குமாருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தம்பி அஜீத்துக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்-சீமான்

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித்குமார் அவர்கள் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தம்பி அஜீத்துக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்-சீமான்

தம்பி அஜீத் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல் , இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்டப் பன்முகத்திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது. இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்பத் திகழும் தம்பி அஜீத் அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.