தனித்துவத்தை இழக்கிறதா திமுக?

 

தனித்துவத்தை இழக்கிறதா திமுக?

எம்.ஜி.ஆரால் திமுக வளர்ந்ததா? திமுகவால் எம்.ஜி.ஆர் வளர்ந்தாரா? என்றால், இரண்டுமே சரிபாதியாக நிகழ்ந்தது என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால், எம்.ஜி.ஆரால் திமுக வளர்ந்தது என்றுதான் பொதுவான அரசியல் நோக்கர்கள் சொல்வதுண்டு.

தனித்துவத்தை இழக்கிறதா திமுக?

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். மூன்று பேரில் யாருக்கு கூட்டம் அதிகம் கூடியது என்று அன்றைய தலைமுறையினரிடம் கேட்டாலே இது தெரிந்துவிடும். எம்.ஜி.ஆர். பேசிவிட்டு போய்விட்டால் கூட்டம் கலைந்துவிடும் என்றுதான் அவரை கடைசியாக பேசச்சொல்லுவதுண்டு. எம்.ஜி.ஆர். பேசிவிட்டுத்தான் கடைசியாகத்தான் அண்ணா பேச வேண்டும். ஆனால், கூட்டத்தை கலையாமல் வைத்திருக்க, எம்.ஜி.ஆரை கடைசியாக பேசச்சொல்லி இருக்கிறார் அண்ணா. அதற்காக, அண்ணாவுக்கு செல்வாக்கு இல்லை என்று சொல்லமுடியுமா என்ன. அண்ணாவு மக்களுக்கு இருந்த பாசத்திற்கு அவரது இறுதிச்சடங்கில் கூடிய கூட்டமே சாட்சி. இருந்தாலும் எம்.ஜி.ஆரிடமிருந்த வசீகரம் வேறு. எம்.ஜி.ஆர். பேசிவிட்டு போய்விட்டதால், மேடைக்கு கீழே யாரும் இல்லாததைக் கண்டு மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவமும் உண்டு.

தனித்துவத்தை இழக்கிறதா திமுக?

முகம் காட்டு ராமச்சந்திரா முப்பது இலட்சம் வாக்குகள் திமுகவிற்கு உறுதி என்று அண்ணா சொன்ன வாசகம், எம்ஜிஆருக்கு இருந்த முக்கியத்துவத்தை உணரலாம். அண்ணாவை காட்டிலும் முதலில் காமராஜரின் மீதுதான் எம்.ஜி.,ஆர். அதிகம் மதிப்பு கொண்டிருந்தார். திரைக்கலைஞர்களை ‘கூத்தாடிகள்’ என்று குறைவாக மதிப்பிட்டதால், அவர் எம்.ஜி.ஆரை தன் பக்கம் இழுத்துக்கொள்ள தவறினார்.

சரியாக கணக்கு போட்டு அண்ணா தன் பக்கம் இழுத்துக்கொண்டார். திமுகவின் வெற்றிக்காக சினிமாவிலும் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார் எம்.ஜி.ஆர். ‘உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே’ என்று பாடல்களிலும் பிரச்சாரம் செய்தார்.

எம்.ஜி.ஆர். தனிகட்சி தொடங்கிய பிறகு , அவர் திமுகவுக்கு ஆதரவாக செய்து வந்ததை எல்லாம் பிரச்சாரத்தில் முன்னெடுத்து வைத்தது திமுக. தொடக்க காலங்களில் இது இருந்தாலும், பின்னர் இந்த நிலை மாறியது.

தனித்துவத்தை இழக்கிறதா திமுக?

தற்போது மீண்டும் எம்.ஜி.ஆரை கையில் எடுத்திருக்கிறது திமுக.

அடிமைப்பெண் படத்தில், சூரியனை காட்டி, அது என்ன என்று எம்.ஜி.ஆர். கேட்க, ‘’அதுதான் உதயசூரியன். நம்ம தெய்வம். இருள் நீக்கி ஒளிகாட்டும் நமது இறைவன். அது இல்லைஎன்றால் நீங்க இல்லை. நான் இல்லை. புல்,பூண்டுகள் இல்லை. எந்த உயிரும் இல்லை. ஏன், இந்த உலகமே இல்லை. கும்பிடுங்க’’ என்று ஜெயலலிதா சொன்னதும், எம்.ஜி.ஆர். சூரியனை பார்த்து வணங்குவார். ஜெயலலிதாவும் வணங்குவார்.

‘சுயமரியாதை, சமூகநீதி, சகோதரத்துவம்’ என்ற வாசகங்களுடன், திமுக ஐடி விங் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆரை முன்னெடுத்து பிரச்சாரத்தினை செய்து வருவதால், தனித்துவத்தை இழக்கிறதா திமுக? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.