’’அதிமுக-பாஜகவை எதிர்க்க இதைவிட வேறென்ன வலிமையான காரணம் வேண்டும்?’’

’’அதிமுக-பாஜகவை எதிர்க்க இதைவிட வேறென்ன வலிமையான காரணம் வேண்டும்?’’

எட்டுவழிச்சாலை, மீத்தேன், ஸ்டெர்லைட், கூடன்குளம், நீட், CAA, ஈழம், தாதுமணல், ஜல்லிக்கட்டு, டாஸ்மாக், கெயில், உழவர், ஒக்கி, ஜாதியம்.. என அறவழிப் போரட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கக்கோரி திருச்சியில் மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க பேரணி மாநாடு நடைபெற்றது.

’’அதிமுக-பாஜகவை எதிர்க்க இதைவிட வேறென்ன வலிமையான காரணம் வேண்டும்?’’

இதுகுறித்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ‘’அனிதா-ஸ்னோலினை தமிழகம் எளிதில் மறந்துவிடுமா? அதிமுக-பாஜக கூட்டத்தை எதிர்க்க இதைவிட வேறென்ன வலிமையான காரணம் நமக்கு வேண்டுமென சொன்ன நிகழ்வே ‘வழக்குகளை இரத்து செய்’ என முழங்கிய மாநாடு. இது வழமையான மாநாடல்ல. அதிமுக-பாஜகவினால் கடுமையாக ஒடுக்கப்பட்ட போராளிகள் ஒன்றுதிரண்ட மாநாடு’’ என்கிறார்.

’’அதிமுக-பாஜகவை எதிர்க்க இதைவிட வேறென்ன வலிமையான காரணம் வேண்டும்?’’

மேலும், ‘’பல்லாயிரக்கணக்கான தமிழர்களை திரட்டியவர்கள் தமிழகத் தேர்தலில் எது அரசியல் முழக்கம் என முடிவு செய்த மாநாடு. எந்த காரணத்திற்காக அதிமுக-பாஜக கூட்டணி விரட்டப்பட வேண்டுமென களப்போராளிகள் முழங்கிய மாநாடு. கன்னியாகுமாரி, தூத்துக்குடி, தேனி, ஈரோடு, சேலம்,திருவண்ணாமலை, செங்கம்,சீர்காழி,

’’அதிமுக-பாஜகவை எதிர்க்க இதைவிட வேறென்ன வலிமையான காரணம் வேண்டும்?’’

மயிலாடுதுறை, கதிராமங்கலம், திருவாரூர், கும்பகோணம், கரூர், மதுரை, சென்னை, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை, பொள்ளாச்சி, விழுப்புரம், காரைக்குடி என தமிழகம் தழுவி பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தியவர்களின் கோரிக்கைகளே அதிமுக-பாஜக எதிர்ப்பின் பின்னணி என வலுவாக இம்மாநாடு பதிவுசெய்தது.

’’அதிமுக-பாஜகவை எதிர்க்க இதைவிட வேறென்ன வலிமையான காரணம் வேண்டும்?’’

அதிமுக-பாஜக ஏன் மாற்றப்பட வேண்டுமென்பதை ஒவ்வொரு தோழரும் அழுத்தம் திருத்தமாக சொல்லிச்சென்றதை மறவாமல், கோரிக்கை வழுவாமல் மக்களிடம் சொல்வோம். தமிழ்நாட்டு தேர்தலின் அரசியலை இயக்கங்களே தீர்மானிக்கின்றன என்பதை மீண்டும் சொல்லிச் சென்றது இம்மாநாடு. ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்’’ என்கிறார் திருமுருகன்காந்தி.