கமலை விமர்சித்த திருமுருகன் காந்தி மீது பாயும் மய்யத்தினர்

 

கமலை விமர்சித்த திருமுருகன் காந்தி மீது பாயும் மய்யத்தினர்

முதலில் கமல் சொன்ன குற்றச்சாட்டு உண்மைதானா என்று தெரியவில்லை. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கமல் ஒரு கோணத்தில் சொன்னதை திருமுருகன்காந்தி வேறோரு கோணத்தில் புரிந்துகொண்டு தனது கருத்தினை பதிவிட்டிருக்கிறார். கமலின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது மாதிரியான கண்ணோட்டத்தில்தான் திருமுருகன் இப்படி தெரிவித்துள்ளாரா என்றும் தெரியவில்லை.

கமலை விமர்சித்த திருமுருகன் காந்தி மீது பாயும் மய்யத்தினர்

’’என்னுடைய தேர்தல் பரப்புரையை இடை நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக நான் எங்கு சென்றாலும் அவ்வப்போது ஆம்புலன்ஸ்சை இடையில் அனுப்புகிறார்கள்’’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சென்னையில் நடந்த மகளிர் தின சிறப்பு கூட்டத்தில் பேசியபோது இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

கமலை விமர்சித்த திருமுருகன் காந்தி மீது பாயும் மய்யத்தினர்

இது குறித்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ‘’லட்சக்கணக்கானக்கில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திரண்டிருந்த சமயத்தில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதை தொல்லையாக பார்க்கவில்லை. CAA போராட்டங்களின் போதும் இசுலாமியர்கள் ஆம்புலன்ஸ் வரும்போதெல்லாம் பேசுவதை நிறுத்தி வழிவிடச் சொல்லி அறிவிப்பு செய்வார்கள். மனிதநேயமில்லா அரசியல் ஆபத்தானது’’ என்கிறார்.

திருமுருகன்காந்தியின் இந்த கருத்துக்கு, ‘’கமல்ஹாசன் பரப்புரைக்கு செல்லும் இடம் எல்லாம் எப்படி சரியாக ஆம்புலன்ஸ் வருகிறது? கொளத்தூர் – 2, அம்பத்தூர் – 4, தங்கசாலை – 2 முறை. அதுவும் அவர் மேடைக்கு வந்த பிறகு தான். கமல்ஹாசன் நற்பணி இயக்கம் தனது சொந்த செலவில் மக்களுக்காக ஆம்புலன்ஸ் கொடுத்தவர்கள். மனிதநேயம் அதிகம் எங்களுக்கு’’ என்று சொல்கிறார் பாலமுருகன் என்பவர்.

கமலை விமர்சித்த திருமுருகன் காந்தி மீது பாயும் மய்யத்தினர்

ஆனால், திமுகவை சேர்ந்த அருண், ’’அவர் போகிற இடத்தில் மருத்துவமனை இருந்தால் கண்டிப்பாக ஆம்புலன்ஸ் வர தான் செய்யும். இப்படி ஒரு தற்குறி தனமாக ஒரு பேச்சு பேசினா என்ன பண்றது..சங்கி என்பது சரி தான்’’ என்கிறார்.