சலசலப்பை ஏற்படுத்திய மணிசங்கர் அய்யர்; சரிகட்டும் ஜோதிமணி

 

சலசலப்பை ஏற்படுத்திய மணிசங்கர் அய்யர்; சரிகட்டும் ஜோதிமணி

கே.எஸ்.அழகிரியின் கண்ணீருக்கு கிடைத்த பரிசுதான் 25 சீட்டு. இத்தனை பாடுபட்டு கண்ணீர் சிந்தி அவர் 25 சீட்டு வாங்கியிருக்கும்போது, அதிகமான இடங்கள் வாங்கினாலும் ஜெயிக்க முடியாது என்று காங்கிரசாரே சொல்லி வருவதுதான் வேடிக்கை.

சலசலப்பை ஏற்படுத்திய மணிசங்கர் அய்யர்; சரிகட்டும் ஜோதிமணி

எல்லா கட்சிகளிலும் கோஷ்டி பூசல் இருக்குமென்றாலும் காங்கிரஸில் அது ரொம்பவே அதிகம்தான். தங்களுக்குள்ளேயே காலை வாரிவிட்டுக் கொண்டிருப்பதால்தான் நாளுக்கு நாள் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறது காங்கிரஸ்.
’’கூடுதல் இடங்கள் வாங்கி அதிக இடங்களில் தோற்பது நல்லதல்ல. 15ல் இருந்து 20 இடங்களில் வெற்றி பெற்றாலே பெருமைதான்’’ என்று சொல்லி கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுதியிருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் மனி சங்கர் அய்யர்.

சலசலப்பை ஏற்படுத்திய மணிசங்கர் அய்யர்; சரிகட்டும் ஜோதிமணி

கடந்த தேர்தலில் 41 சீட்டு வாங்கி 8 இடங்களில் மட்டுமே வென்றதால்தான் திமுக இந்த முறை கறார் காட்டி நின்றது. கண்ணீர் போராட்டத்திற்கு பின்னர்தான் 25க்கே வந்தது திமுக. இல்லை என்றால் 15தான்.

மணிசங்கரின் பேச்சினால் காங்கிரசார் பலரும் எரிச்சலில் இருக்கும் சூழலில் அதை சரிக்கட்டும் விதமாக, அக்கட்சியின் கரூர் எம்.பி. ஜோதிமணி, ‘’எண்ணிக்கை குறித்த வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு. இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு முக்கியம் முறையாக, கூட்டாக, வெளிப்படைத்தன்மயுடன் செயல்பட்டு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை பெறுவது. வெற்றிவாய்ப்பு, தகுதி, கட்சி விசுவாசம் மிகுந்த வேட்பாளர்களை நிறுத்துவது. தமிழக விரோத பிஜேபி அதிமுகவை வெல்வது’’என்று குறிப்பிட்டுள்ளார்.