ஈழத்தாயகத்தில் பிரபாகரன் செய்ததை தமிழகத்தில் நாங்கள் செய்கிறோம்… சீமான்

 

ஈழத்தாயகத்தில் பிரபாகரன் செய்ததை தமிழகத்தில் நாங்கள் செய்கிறோம்… சீமான்

உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த மகளிர் நாள் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஈழத்தாயகத்தில் பிரபாகரன் செய்ததை தமிழகத்தில் நாங்கள் செய்கிறோம்… சீமான்

அவர் இதுகுறித்து மேலும், ‘’உலகில் மூத்த தொல்குடியான தமிழினம் முதலில் தாய்வழிச் சமூகமாகவே தோன்றி சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் பெண்களின் தலைமையேற்றே கிளைத்தது. சங்க காலத்திலும் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக, கலையில் தேர்ந்தவர்களாக, அரசியல் அதிகாரம் மிக்கவர்களாகத் திகழ்ந்துள்ளனர். அப்படிப் போற்றிக் கொண்டாடப்பட்ட பெண்கள் இடைக்காலத்தில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்புகளினாலேயே பெண்களுக்குரிய தலைமைத் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுப் பெண்ணடிமைத்தனம் தமிழ் மண்ணில் வேரூன்றியது’’ என்கிறார்.

ஈழத்தாயகத்தில் பிரபாகரன் செய்ததை தமிழகத்தில் நாங்கள் செய்கிறோம்… சீமான்

’’இழந்த உரிமைகளையும், பெருமைகளையும் மட்டுமின்றி அதிகாரங்களையும் மீளப் பெரும்பொருட்டே ‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!’ என்று பெண்ணிய விடுதலைக்குச் சங்கநாதம் எழுப்புகிறார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். ‘பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை!’ எனக்கூறி பெண்ணியத்தின் பெருந்தேவையைப் பேரறிவிப்பு செய்கிறார் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நிலத்தை ஆண்ட திராவிட கட்சிகளின் ஆட்சியில் பெண்ணிய விடுதலையும், பாலினச்சமத்துவமும் வெறும் உத்தட்டளவில் மட்டுமே பேசப்படுபொருளாக இருக்கிறதே ஒழிய, அதனை இன்றுவரை முழுமையாகச் செயலாக்கம் பெறவில்லை. ஆனால், ஈழத்தாயகத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆண் – பெண் சமத்துவத்தை அனைத்து துறைகளிலும் முழுமையாக நிறுவிக்காட்டினார். அவர்தம் பிள்ளைகள் அதனைத் தமிழகத்தில் செயற்படுத்த அணியமாகி நிற்கிறோம்’’என்கிறார்.

ஈழத்தாயகத்தில் பிரபாகரன் செய்ததை தமிழகத்தில் நாங்கள் செய்கிறோம்… சீமான்

’’கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் சமவாய்ப்பு என்பதைவிட ஆயிரம் மடங்கு உயர்வானது அரசியலில் பெண்கள் தங்களுக்கான சமவாய்ப்பினை அடைவதென்பது. அரசியலில் பெண்கள் அதிகாரத்தைப் பெறுவதென்பது மற்ற அனைத்து துறைகளிலும் தங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கான திறவுகோலாகும். அதனை நன்குணர்ந்தே ஆட்சி, அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே இந்தியத் தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவரை எவரும் செய்திடாத முன்னெடுப்பைக் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் சரிநிகராகக் நாம் தமிழர் கட்சி களமிறக்கியது. உண்மையான பாலினச்சமத்துவத்தைப் பேணும் அப்பெருஞ்செயலின் நீட்சியாக, எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் 117 தொகுதிகளில் சரிபாதி இடங்களில் பெண்களைக் களம் காண பேரறிவிப்புச் செய்து புதிய வரலாறு படைத்துள்ளது’’ என்று தெரிவிக்கிறார்.