தேமுதிகவுக்கு எத்தனை சீட்டு? முதல்வருடனான சுதீஷ் பேச்சில் உடன்பாடு

 

தேமுதிகவுக்கு எத்தனை சீட்டு? முதல்வருடனான சுதீஷ்  பேச்சில்  உடன்பாடு

அதிமுக கூட்டணியில் தேமுகதான் இன்னமும் ஒரு முடிவுக்கு வராமல் இருக்கிறது. 40 தொகுதிகளில் ஆரம்பித்து 25 தொகுதிகளுக்கு தேமுதிக இறங்கி வந்துவிட்டது. 12 தொகுதிகளில் ஆரம்பித்து 13 தொகுதிகள் வரைக்கும் அதிமுகவும் வந்துவிட்டது.

தேமுதிகவுக்கு எத்தனை சீட்டு? முதல்வருடனான சுதீஷ்  பேச்சில்  உடன்பாடு

நேற்று முன் நடந்த தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி, 23 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்திற்கு இறங்கி வந்துவிட்டோம் என்று கூறினார். மேலும், இன்றைக்குள் (8.3.2021) பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். ஆனாலும் 23 தொகுதிகள் இல்லை என்று சொல்லப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நேற்று இரவு எல்.கே.சுதீஷ், தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேசியிருக்கிறார்.

தேமுதிகவுக்கு எத்தனை சீட்டு? முதல்வருடனான சுதீஷ்  பேச்சில்  உடன்பாடு

ஈபிஎஸ் -ஓபிஎஸ் உடனான இந்த சந்திப்பில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது என்று இரு தரப்பிலும் பேசி வருகிறார்கள். எத்தனை சீட்டில் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெரியவில்லை என்கிறார்கள். 13 தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக உத்தேசமாக சொல்கிறார்கள்.

தேமுதிகவுக்கு எத்தனை சீட்டு? முதல்வருடனான சுதீஷ்  பேச்சில்  உடன்பாடு

இதற்கிடையில், சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக ஒதுக்கும் தொகுதிகள் பற்றி தேமுதிக ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வேட்பாளர்கள் தேர்வு பற்றியும், தேமுதிக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் அதிமுக – தேமுதிக தொகுதிப்பங்கீட்டு உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.