உள்ளாட்சி அமைச்சராக இருந்த ஸ்டாலின் இதை கூட அறியாமல் பேசி கொண்டிருப்பது வேடிக்கை; பாஜக

உள்ளாட்சி  அமைச்சராக இருந்த ஸ்டாலின் இதை கூட அறியாமல் பேசி கொண்டிருப்பது வேடிக்கை; பாஜக

திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவினை முற்றிலுமாக ஒழிப்போம் என்று 7 வாக்குறுதிகளை அளித்தார் ஸ்டாலின். திமுகவுக்கு திருப்புமுனை தரும் என்கிற செண்டிமெண்டால் திருச்சியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு வாக்குறுதிகளை அளித்தார்.

உள்ளாட்சி  அமைச்சராக இருந்த ஸ்டாலின் இதை கூட அறியாமல் பேசி கொண்டிருப்பது வேடிக்கை; பாஜக

இந்த 7 வாக்குறுதிகளுமே தன்னிடம் இருந்து காப்பியடித்து ஸ்டாலின் சொல்லி இருப்பதாக கமல்ஹாசன் சொல்லி வருகிறார். இந்நிலையில்,மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவினை முற்றிலுமாக ஒழிப்போம் என்று பேசியிருக்கும் ஸ்டாலினுக்கு, அதற்காகத்தான் ரோபோக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகூட தெரியாதா என்று கேட்கிறது பாஜக.

உள்ளாட்சி  அமைச்சராக இருந்த ஸ்டாலின் இதை கூட அறியாமல் பேசி கொண்டிருப்பது வேடிக்கை; பாஜக

’’மனித கழிவுகளை மனிதனே அள்ளும் முறையை ஒழிக்க வேண்டும் என சொல்லும் ஸ்டாலினே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி. வேலுமணி அவர்கள், விருதுநகர், மயிலாடுதுறை, ராமநாதபுரம்,நாகப்பட்டினம், கடலூர்,திருவாரூர், தஞ்சாவூர்,திருப்பூர்,ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு தலா ஒரு ரோபோட்டும், கோவை மாவட்டத்திற்கு 5ரோபோட்டும் வழங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இது மட்டுமின்றி தேனி உட்பட 11மாவட்டங்களுக்கு ரோபோட் வாங்க டெண்டர் பெற்றுள்ளார். உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் இதை கூட அறியாமல் பேசி கொண்டிருப்பது வேடிக்கை, முதல்வர் கனவிலேயே மிதக்காதீர்கள் ஸ்டாலின் . நிஜ உலகத்திற்கு வாருங்கள், எழுதி கொடுப்பதை மட்டுமே பார்க்காமல் நாட்டில் என்ன நடக்கிறது என்றும் பாருங்கள்’’ என்கிறார் பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம்.