எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா பாடலை மனப்பாடம் செய்யும் மோடி

 

எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா பாடலை மனப்பாடம் செய்யும் மோடி

தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும்போதெல்லாம் ‘வணக்கம்’ என்று தமிழில் பேசி கவர்ந்து வரும் பிரதமர் நரேந்திரமோடி, தமிழர்களை கவர வேண்டும் என்று, கோவையிலும், புதுச்சேரியிலும் நடந்த பொதுக்கூட்டத்தில், திருக்குறள் சொல்லி அசத்தினார்.

எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா பாடலை மனப்பாடம் செய்யும் மோடி

தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு என்று ஒரு தனி வட்டம் இருக்கிறது. இன்றளவும் அதிமுக நிலைத்து நிற்க எம்.ஜி.ஆர். எனும் அந்த மூன்றெழுத்து மந்திரம்தான் காரணம். ஜெயலலிதாவுக்கு இளைய தலைமுறையினரிடையே அதிகம் ஈர்ப்பு இருக்கிறது.

இதை உணர்ந்து கொண்ட மோடி, அடுத்து தமிழகத்தில் நடைபெறூம் பாஜக – அதிமுக கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசும்போது, எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா பாடிய பாடலை பாடி இருவரின் ரசிகர்களையும் கவர்ந்திழுக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர், எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா பாடி நடித்த பிரபல பாடல்களை மனப்பாடம் செய்துவருவதாக தகவல்.

எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா பாடலை மனப்பாடம் செய்யும் மோடி

எதிர்வரும் ஏப்ரல் 6ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக, தமாகா கட்சிகள் இணைந்து போட்டியிட உள்ளன. கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மற்ற கட்களுடன் தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. விரைவில் இது முடிவுக்கு வந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும், பிரச்சாரத்தை தொடங்கிவிடுவார்கள். அதனால்தான், பேச்சுவார்த்தை ஒரு பக்கம் இருக்கும்போது, பாடலை மனப்பாடம் செய்து பிரச்சாரத்திற்காக தயாராகி வருகிறார் மோடி.