காங்கிரஸ் என்னிடம் கூட்டணி பேசியது உண்மை: இவ்வளவு பெரிய கட்சி தவழலாமா?கமல்

 

காங்கிரஸ் என்னிடம் கூட்டணி பேசியது உண்மை: இவ்வளவு பெரிய கட்சி தவழலாமா?கமல்

திமுக கூட்டணியில் அதிக இடங்களை எதிர்பார்த்து ஏமாற்றம் ஏற்பட்டதால் அதிருப்தியில் இருந்த மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் கட்சிகள் தங்கள் பக்கம் வந்துவிடும் என்பது மாதிரியே பேசி வந்தார் கமல்ஹாசன். காங்கிரசும் கமலுடன் 3வது அணி அமைக்க பேசியதாக தகவல் வந்தது. அந்த கட்சிகளும் அப்படித்தான் போக்கு காட்டின. கடைசியில், புலம்பித்தீர்த்தபடி, கண்ணீர்விட்டபடியே திமுக கொடுத்ததை வாங்கிவிட்டன.

காங்கிரஸ் என்னிடம் கூட்டணி பேசியது உண்மை: இவ்வளவு பெரிய கட்சி தவழலாமா?கமல்

விசிக, சிபிஐ இரண்டும் ஆறு சீட்டுகளை வாங்கியபின்னரும், மதிமுகவும், சிபிஎம்மும் கடைசி வரைக்கும் போராடிப்பார்த்தும் 6 சீட்டுகள்தான் வாங்கின. கண்ணீருக்கு கிடைத்த பரிசாக காங்கிரசுக்கு 25 சீட்டுகளை ஒதுக்கியது திமுக.

கமல்ஹாசனுடன் தாங்கள் கூட்டணி பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கும் காங்கிரசாருக்கு, சென்னை தங்கசாலை பிரச்சாரத்தில் பேசியபோது உண்மையை போட்டு உடைத்தார் கமல்ஹாசன்.

காங்கிரஸ் என்னிடம் கூட்டணி பேசியது உண்மை: இவ்வளவு பெரிய கட்சி தவழலாமா?கமல்

’’3வது அணியில் நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிட்டு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான். வதந்தி என்று அவர்கள் சொல்கிறார்கள். இல்லை என்று நான் சொல்கிறேன்’’ என்று சொன்ன கமல், .’’யார் வந்தாலும் 6 சீட்டு தான். இவர்களும் கொடுத்ததை வாங்கி கொண்டு ஆறு மனமே ஆறு என்று போய்விடுகிறார்கள்’’ என்றார்.

மேலும், ‘’ நூறு ஆண்டுகளான கட்சி, ‘’உட்கார்ந்து பேசலாம் வாங்க’’ என்று கூறினால், அங்கு சென்று தவழுகிறார்கள். 101 இடங்கள் வாங்கிய காங்கிரஸ் இன்றைக்கு தவழந்து செல்கிறது. இவ்வளவு பெரிய கட்சி தவழலாமா?’’ என்று கேட்டிருக்கிறார்.

’’சரி, போய்விட்டீர்கள். மீண்டும் வருவீர்கள்’’ என்றும் நம்பிகை தெரிவித்துள்ளார் கமல்.