மீனாட்சி அம்மன் தோளில் வந்தமரும் பச்சைக்கிளி; பக்தர்கள் பரவசம்

மீனாட்சி அம்மன் தோளில் வந்தமரும் பச்சைக்கிளி; பக்தர்கள் பரவசம்

விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கல் ஊரில் உள்ள கருநெல்லி நாதர் ஆலயத்தில் கடந்த ஒரு வாரமாக அதியசம் நடப்பதாக பக்தர்கள் பரவசத்துடன் வந்து செல்கின்றனர்.

மீனாட்சி அம்மன் தோளில் வந்தமரும் பச்சைக்கிளி; பக்தர்கள் பரவசம்

ஆலயத்தில் உள்ள மீனாட்சி அம்மனின் தோளில் வந்து தினமும் ஒரு பச்சைக்கிளி அமர்ந்துகொள்கிறது. பூஜை செய்யும் குருக்களையும், பக்தர்களையும் கண்டு அஞ்சி பறந்து செல்லாமல் மீனாட்சி அம்மனின் தோளிலேயே நாள் முழுவதும் அமர்ந்திருக்கிறது. கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக இது நடக்கிறது.

மீனாட்சி அம்மன் தோளில் வந்தமரும் பச்சைக்கிளி; பக்தர்கள் பரவசம்

பொதுவாகவே மீனாட்சி அம்மனின் தோளில் பச்சைக்கிளி இருக்கும். பறக்க இயலாத பசியால் தவித்த கிளி ஒன்று அடைக்கலம் வந்த மீனாட்சி அம்மனை நோக்கி தவமிருந்ததாகவும், அதனால் அக்கிளையை அம்மன் தன் தோளில் வைத்துக்கொண்டார் என்று ஒரு கதை இருக்கிறது. பக்தர்கள் அம்மனிடம் வைக்கும் கோரிக்கையை திரும்ப திரும்ப எடுத்துச்சொல்லவே அம்மனின் தோளி கிளி இருப்பதாகவும் ஒரு கதை உண்டு.

மீனாட்சி அம்மன் தோளில் வந்தமரும் பச்சைக்கிளி; பக்தர்கள் பரவசம்

பக்தர்களின் கோரிக்கையை எடுத்துச்சொல்லவே கருநெல்லி நாதர் ஆலயத்திற்கும் கிளி வந்து அமர்ந்திருப்பதாக பக்தர்கள் பரவசம் அடைந்து வருகின்றனர்.

நாத்திகர்கள் சிலரோ, சாமிக்கு வைக்கும் பழங்களை திங்கவே கிளி வருவதாகவும், எப்படியோ ஒரு ஜீவனின் பசியாறினால் சரிதான் என்றும் சொல்கிறார்கள்.