தங்கப்பதக்கம் வென்றார் அஜித்குமார்

 

தங்கப்பதக்கம் வென்றார் அஜித்குமார்

46வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார் அஜித்குமார்.

தங்கப்பதக்கம் வென்றார் அஜித்குமார்

நடிக்க வருவதற்கு முன்பே பைக் ரேசில் ஆர்வம் காட்டி வந்த அஜித்குமார், நடிக்க வந்த பின்னரும் கூட பைக் ரேசில் கலந்துகொண்டு வந்தார். கார் ரேசிலும் ஒரு ரவுண்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் போட்டோகிராபியிலும் ஆர்வம் காட்டி வந்த அஜித், ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தும் அசத்தினார்.

தங்கப்பதக்கம் வென்றார் அஜித்குமார்

பல்கலை மாணவர்களுடன் இணைந்து ட்ரோன் தயாரித்ததோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு குறித்தும் வகுப்பெடுத்து வந்தார். விழிப்புணர்வுக்காக ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் பைக் பயணம் செய்தும் வருகிறார். உடல்புத்துணர்வுக்காக சைக்கிளிங்கும் செய்து வருகிறார்.

தங்கப்பதக்கம் வென்றார் அஜித்குமார்

தற்போது துப்பாக்கி சுடுதல் பயிற்சியை முடித்து 46வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கமும் வென்றிருக்கிறார் அஜித்குமார்.

தங்கப்பதக்கம் வென்றார் அஜித்குமார்

வலிமை படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையே சென்னை ரைபிள் கிளப் சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அது தொடர்பான படங்கள் இணையங்களில் வெளியாகி வருவதால் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ஏங்கிக்கிடந்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி முடிந்து, போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற அஜித்குமாருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.