அடுத்த ரவுண்டுக்கு தேர்வானார் அஜித்குமார்

 

அடுத்த ரவுண்டுக்கு தேர்வானார் அஜித்குமார்

தொடர் அறுவசை சிகிச்சைகளினால் பைக் ரேஸ்-ஐ தவிர்த்திருக்கும் அஜித்குமார், அண்ணா பல்கலை மாணவர்களுடன் இணைந்து ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டு அதில் சாதித்தும் காட்டினார். அரசு விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் அந்த ட்ரோனின் பயன்பாடு சிறப்பான இடத்தை பெற்று வருகிறது.

அடுத்த ரவுண்டுக்கு தேர்வானார் அஜித்குமார்

தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையேசென்னை ரைபிள் கிளப் சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அது தொடர்பான படங்கள் இணையங்களில் வெளியாகி வருவதால் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ஏங்கிக்கிடந்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இடையே, ஆந்திராவில் சைக்கிளிங் சென்ற போட்டோக்கள் வைரல் ஆகின.

அடுத்த ரவுண்டுக்கு தேர்வானார் அஜித்குமார்

தற்போது அஜித்குமார் ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற போட்டோக்கள் வைரல் ஆகி வருகின்றன.

அடுத்த ரவுண்டுக்கு தேர்வானார் அஜித்குமார்

வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டததால், துப்பாக்கி பயிற்சியில் தீவிரம் காட்டி வந்த அஜித்குமார், 40வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அடுத்த ரவுண்டுக்கு தேர்வாகி இருக்கிறார்.

அடுத்த ரவுண்டுக்கு தேர்வானார் அஜித்குமார்