பாமக வேட்பாளர்கள் பட்டியலில் ஜான் பாண்டியன்! டி.எம்.எம்.கே.வினர் மகிழ்ச்சி!

 

பாமக வேட்பாளர்கள் பட்டியலில் ஜான் பாண்டியன்! டி.எம்.எம்.கே.வினர் மகிழ்ச்சி!

அதிமுக கூட்டணியில் நிலக்கோட்டை தொகுதி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த ஜான் பாண்டியன், அதே கூட்டணியில் பாமகவில் போட்டியிடுகிறார் என்று தகவலால் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

பாமக வேட்பாளர்கள் பட்டியலில் ஜான் பாண்டியன்! டி.எம்.எம்.கே.வினர் மகிழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அதிமுக அறிவித்திருக்கிறது.

முன்னதாக அவர் அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருந்தார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேன்மொழி வெற்றிபெறுவார் என்று கட்சியின் சீனியவர்கள் சொல்லி வந்த நிலையில், அவர்தான் மீண்டும் வருவார் என்று பேச்சு இருந்தது.

பாமக வேட்பாளர்கள் பட்டியலில் ஜான் பாண்டியன்! டி.எம்.எம்.கே.வினர் மகிழ்ச்சி!

ஆனால், அதிமுக கூட்டணியில் இருக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன், நிலக்கோட்டை தொகுதியில் தனக்கு சீட் ஒதுக்குமாறு அதிமுகவிடம் கேட்டு வந்தார்.

அதிமுக அதற்கு ஒப்புதல் தரும் முன்பாகவே, ‘நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜான் பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்’ என்ற போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, தேன்மொழி தரப்பினரை அதிரவைத்தது. ஆனாலும், தேன்மொழியே வென்றுவிட்டார்.

அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்.பி.சண்முகநாதன், ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார் என்று, நிலக்கோட்டையில் தேன்மொழி மீண்டும் போட்டியிடுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாமக வேட்பாளர்கள் பட்டியலில் ஜான் பாண்டியன்! டி.எம்.எம்.கே.வினர் மகிழ்ச்சி!

இதனால் அதிருப்தியில் இருந்த ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவின் வேட்பாளர்கள் பட்டியலில் ஜான்பாண்டியன் பெயர் இருப்பதாக தகவல்.

அதிமுக கூட்டணியில் 2 தனி தொகுதிகள் உள்பட 23 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டு தனி தொகுதிகளில் ஒன்றில் வடிவேல் ராவணன் நிற்கிறார் என்று பாமக தரப்பில் கூறப்படுகிறது. இன்னொரு தனி தொகுதியில் ஜான் பாண்டியனை நிற்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.