வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமித்ஷா

 

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமித்ஷா

கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. பாஜக சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனே களமிறங்கியிருக்கிறார். அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலையில் டெல்லியில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறார்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமித்ஷா

நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ராணுவ மைதானத்தில் வந்திறங்கிய அமித்ஷா, அங்கிருந்து சுசீந்திரம் சென்றார். சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய ஸ்வாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். பின்னர், சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமித்ஷா

கன்னியாகுமரி தொகுதிக்கு கடந்த 2014ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வசந்தகுமாரை தோற்கடித்து வெற்றி பெற்றார் பொன்.ராதாகிருஷ்ணன். ஆனால், 2019ல் நடந்த நடாளுமன்ற தேர்தலில் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை தோற்கடித்து வெற்றி பெற்றார் வசந்தகுமார்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமித்ஷா

வசந்தகுமாரின் மரணத்திற்கு பிறகு கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. தேர்தல் விதிகளின்படி கடந்த பிப்ரவரி 28ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும். ஆனால், சட்டமன்ற தேர்தலும் கன்னியாகுமரி நாடளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று உடன்படிக்கை செய்யப் பட்டிருக்கிறது. அதனால், பாஜக சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனே களமிறங்கி இருக்கிறார்.