முதல்வராக அரியணை ஏறுவதற்கான கால்கோள் விழா! திருச்சியை கருப்பு சிவப்பு கடலாக்குவோம்! உதயநிதி அழைப்பு

 

முதல்வராக அரியணை ஏறுவதற்கான கால்கோள் விழா! திருச்சியை கருப்பு சிவப்பு கடலாக்குவோம்! உதயநிதி அழைப்பு

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 11வது மாநில மாட்டுக்கான வேலைகள் நடந்து வந்த வேளையில் திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் மாநாட்டினை சட்டமன்ற தேர்தலுக்கான பொதுகூட்டமாக நடத்துகிறது திமுக. இன்று அந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அக்கட்சியின் இளைகரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

முதல்வராக அரியணை ஏறுவதற்கான கால்கோள் விழா! திருச்சியை கருப்பு சிவப்பு கடலாக்குவோம்! உதயநிதி அழைப்பு

அதில், ‘’திருச்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாபெரும் பொதுக்கூட்டம் ” விடியலுக்கான முழக்கம் எனும் பெயரில் 7-03-2021 இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது . கழகத்தின் பொதுக்கூட்டம் என்ற போதிலும் , மாநாட்டிற்கு இணையாகவே ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன .திராவட இயக்கத்திற்கு பல திருப்புமுனைகளை தந்த திருச்சியில் இதுவரை பல மாநாடுகள் , பொதுக்கூட்டங்கள் நடத்திருந்தாலும் , இது சற்றே வித்தியாசமானது’’என்று தெரிவித்துள்ள அவர்,

’’கழகம் அண்ணாவை இழந்திருந்த போது , கழகத்தின் மாநில பாநாட்டை கலைஞர் திருச்சியில் நடத்தினார். கலைஞரும் இனமான பேராசிரியரும் இல்லாத இந்த சூழலில் அவர்கள் வழி நடக்கும் நம் கழகத்தவைர் சட்டப்பேரவை பொதுத்தேர்துக்கான முதல் பொதுக்கூட்டத்தை மாநாடு என சொல்லும் அளவிற்கு திருச்சியில் நடத்துகிறார்.

முதல்வராக அரியணை ஏறுவதற்கான கால்கோள் விழா! திருச்சியை கருப்பு சிவப்பு கடலாக்குவோம்! உதயநிதி அழைப்பு

திமுக கழகம் அரை நூற்றாண்டு காலமாக கட்டிக்காத்த தமிழகத்தின் பெருமைகளை எல்லாம், கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசிடம் அதிமுக அடிமைகள் அடகு வைத்து விட்டனர் . அடிமைகளை இழுத்துப்பிடிக்கும் கடிவாளமாக அவர்கள் செய்த ஊழலும் , கொள்ளையும் மத்தியில் இருக்கும் பாசிசவாதிகளுக்கு பேருதவியாக இருக்கின்றன.

அடிமைகளின் ஊழல் வெறிக்கு நம் உரிமைகள் பளியிடப்பட்டுள்ளன. கல்வி, வோலவாய்ப்பு, பொருளாதாரம், சுகாதாரம் என்ற அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் அதிமுக அடிமைகளின் நீர்வாக சீர்கேட்டால் சீரழிந்துவிட்டன.

கழக ஆட்சியில் தன்னபிக்கையுடன் வலம் வந்த மாணவர் மற்றும் இளைய சமுதாயம் இன்று கண்ணீரில் மிதக்கிறது . நாம் வாரற்றில் படித்த இருண்ட காலத்தை , அடிமைகள் ஆட்சியில் நேரடியாகவே காண்கிறோம் . சமூக நீதிக்கும் – சம உரிமைக்கும் தீங்கிழைக்கும் சூழ்ச்சிக்காரர்களை காலில் விழுந்தும் , தோளில் சுமந்தும் தமிழகத்திற்குள் நுழைய முயலும் அடிமைகளை விரட்ட வேண்டிய தருணம் இது’’என்கிறார்.

முதல்வராக அரியணை ஏறுவதற்கான கால்கோள் விழா! திருச்சியை கருப்பு சிவப்பு கடலாக்குவோம்! உதயநிதி அழைப்பு

மேலும், ‘’ பெருமைக்குரிய நம் தமிழகத்தை இந்த எடுபீடிகளிடமிருந்து மட்டுபல்ல , அவர்களை ஆட்டுவிக்கும் ஆதிக்கவாதிகளிடமிருந்தும் மீட்பதற்கான கருவி தான் எதிர் வரும் சட்டமன்ற தேர்தல். இத்தேர்தலின் கழகத்தையும் – நம் கழக தலைவர் உருவாக்கியுள்ள வெற்றி கூட்டணியையும் மாபெரும் வெற்றி அடையச்செய்ய திருச்சி பொதுக்கூட்டம் அச்சாரமிடட்டட்டும்’’என்கிறார் அழுத்தமாக .

’’தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கையாக அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தம் கழக தலைவர் முதல்வராக அரியணையேறுவதற்கான கால்கோள் விழாவே இந்த திருச்சி பொதுக்கூட்டம் . இந்த பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்தும் கழகத்தினர் கலந்து கொள்வார்கள் , இருந்தும் எல்லாவற்றிலும் முதல் அணியாக இருக்கும் கழக இலைஞரணி , இந்த பொதுக்கூட்டத்தை வெற்றிக் கூட்டமாக்க முக்கிய பங்காற்ற வேண்டும். அதற்கு இளைகர் அணியின் மாநில துணை செயலாளர்கள், மாவட்ட , மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊர்க்கிளை, வட்ட நிர்வாகிகள் மற்றும் தம்பிமார்கள் அலைகடலென திருச்சியில் திரள்வோம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கடல் காணா திருச்சியை கருப்பு சிவப்பு கடலாக்குவோம்’’என்று அழைக்கிறார்.