பாபநாசம் சினிமாவும் திமுக கூட்டணி கட்சிகளும்

 

பாபநாசம் சினிமாவும் திமுக கூட்டணி கட்சிகளும்

நடந்த சம்பவத்தை மறைப்பதற்காக வீட்டில் உள்ள அனைவரும் ஒரு பொய்யை ஒரே மாதிரியாக சொல்லி தப்பிப்பதுதான் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் கதை. திமுக கூட்டணியினரின் கதையும் அப்படித்தான் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாபநாசம் சினிமாவும் திமுக கூட்டணி கட்சிகளும்

தேசிய கட்சி காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகளிடம் கறார் காட்டுங்கள். இத்தனை தொகுதிகள்தான் கொடுக்க முடியும் என்று அடித்துச்சொல்லுங்கள். அவர்களுக்கு வேற வழியில்லை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இத்தனை வருடமும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் துணை நின்றார்களே. அவர்களிடம் எப்படி கறார் காட்டுவது என்ற தயக்கம் உங்களுக்கு வேண்டாம். தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் நேரடியாக நீங்கள் தலையிடாதீர்கள். மூத்த நிர்வாகிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்துங்கள். எக்காரணம் கொண்டும் அதிக சீட் கொடுக்க கூடாது. திமுகதான் அதிக இடங்களில் நிற்க வேண்டும். அப்போதுதான் வெற்றி வாய்ப்பு உறுதியாகும் என்று ஐபேக் பிரசாந்த் கிஷோர் சில மாதங்களுக்கு முன்னே ஸ்டாலினிடம் தீர்க்கமாக சொல்லிவிட்டார். அதன்படிதான் திமுகவிலும் தொகுதிப்பங்கீட்டு உடன்படிக்கை ஏற்பட்டு வருகிறது.

பாபநாசம் சினிமாவும் திமுக கூட்டணி கட்சிகளும்

எப்படி முறுக்கிக்கொண்டு நின்றாலும், கடைசியில் திமுக கொடுப்பதை ஏற்றுக்கொண்டு, பாஜகவை வீழ்த்த, அதிமுக வீழ்த்த, ஊழல் ஆட்சியை அகற்றை எண்ணித்தான் சீட் எண்ணிக்கையை பற்றி யோசிக்காமல் ஒப்புக்கொண்டோம் என்று சொல்லிவைத்தது மாதிரி எல்லோரும் ஒரே மாதிரியாக பேசி வருகிறார்கள்.

பாபநாசம் சினிமாவும் திமுக கூட்டணி கட்சிகளும்

நடந்தது, நடப்பது, நடக்க இருப்பது எல்லாம் எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தும் இவர்கள் இப்படி சொல்வதால்தான், ‘’எப்படியும் திமுக நமக்கு கேக்குற சீட்டு தரமாட்டாங்க. கொடுக்குறதை வாங்க வேண்டியதுதான். நமக்கும் இத விட்டா வேற வழியில்ல. ஆனா, எல்லோரும் வெளிய போய் பாசிச பாஜக காலூன்றாமல் தடுக்கவே இதை ஒப்புகொண்டோம்னு வழக்கம் போல ஒரே மாதிரி சொல்லணும் சரியா?’’ என்ற போர்டுகார்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாபநாசம் சினிமாவும் திமுக கூட்டணி கட்சிகளும்