’’அதிமுக ஒன்றும் பாஜகவுக்கு தலையாட்டி பொம்மை அல்ல’’

 

’’அதிமுக ஒன்றும் பாஜகவுக்கு தலையாட்டி பொம்மை அல்ல’’

ஓ.பன்னீர்செல்வமும் , எடப்பாடி பழனிச்சாமியும் பாஜகவின் தலையாட்டி பொம்மைகள் என்ற விமர்சனம் இருக்கிறது. அண்மையில் விழுப்புரம் வந்த அமித்ஷாவுக்கு கூட வானதி சீனிவாசன் இரண்டு தலையாட்டி பொம்மைகள் பரிசாக கொடுத்தார். உடனே, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ‘’இந்த இரண்டு பொம்மைகளின் பெயரைச்சொன்னால் பரிசு உண்டு’’ என்று சொல்ல, ‘’இது தெரியாதா, நாட்டுக்கே தெரியுமே, ஓபிஎஸ் -ஈபிஎஸ் என்று’’ என கமெண்ட் செய்து வந்தனர்.

’’அதிமுக ஒன்றும் பாஜகவுக்கு தலையாட்டி பொம்மை அல்ல’’

அதிமுக கூட்டணியில் 60 சீட் கேட்ட பாஜகவுக்கு 16 சீட்டுதான் தரமுடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னதுமே, அதிமுக ஒன்றும் பாஜகவுக்கு தலையாட்டி பொம்மை அல்ல என்ற பேச்சு வந்தது. தேர்தல் உடன்படிக்கை முடிந்தபிறகு, அதிமுக ஒன்றும் பாஜகவுக்கு அடிமை இல்லை. பாஜகதான் அதிமுகவுக்கு அடிபணிந்து போகிறது என்று பேச்சு வந்திருக்கிறது.

’’அதிமுக ஒன்றும் பாஜகவுக்கு தலையாட்டி பொம்மை அல்ல’’

40 ல் இருந்து 30 இறங்கி வந்திருக்கிறது பாஜக. அதன்பிறகு, 16ல் இருந்து 18க்கு ஏறி வந்திருக்கிறார் எடப்பாடி. பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்தபோது , நாங்கள் கேட்கும் சீட் கொடுத்தால் நீங்கள் கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொள்கிறோம். நீங்கள் கொடுக்கும் சீட்டுதான் என்றால் நாங்கள் கேட்கும் இடங்களை கொடுக்க வேண்டும் என்று கட்டையை போட்டிருக்கிறது பாஜக. அதற்கும் அசைந்துகொடுக்கவில்லை எடப்பாடி. 18ம் படியிலேயே நின்றிருக்கிறார்.

’’அதிமுக ஒன்றும் பாஜகவுக்கு தலையாட்டி பொம்மை அல்ல’’

இப்படியே போனால் தேர்தல் வந்துவிடும் என்பதை இரு தரப்பினரும் உணர்ந்ததால், 20 சீட்டில் உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது.

தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்று பாஜக நிர்வாகிகள் சிலரே, ‘’பாஜகவின் அடிமை அதிமுக’ன்னு வெளியேதான் பேசிக்கிறாங்க. ஆனா, உள்ளே நடக்குற நிலவர வேற மாதிரியா இருக்குது. பாஜகதான் அதிமுககிட்ட அடிபணிஞ்சு போகுது’’ன்னு முணுமுணுக்கிறாங்க.