Home இந்தியா காதலியுடன் உல்லாசம்; கையும் களவுமாக பிடித்து வெளுத்து வாங்கிய மனைவி

காதலியுடன் உல்லாசம்; கையும் களவுமாக பிடித்து வெளுத்து வாங்கிய மனைவி

தெலுங்கானா மாநிலம் பத்தாத்ரி மாவட்டத்தில் கொத்த குடமாமில் வசிக்கும் ராஜூவுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு 11 மற்றும் 9 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

கேபிள் ஆபரேட்டரான ராஜூ, கடந்த ஒரு வருடமாக வீட்டிற்கு சரியாக வராததால், மனைவிக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் இருவருக்கு இடையேயும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. ஒரு கட்டத்தில் ஏது சந்தேகம் வந்து, கணவனை பாலோவ் செய்ததில் அவர் அதே பகுதியில் திருமணமாகாத பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தனது உறவினர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார் அவர். அப்புறம் அவர்கள் கொடுத்த தெம்பில், கட்டையை எடுத்துக்கொண்டு ஆவேசமாக புறப்பட்டிருக்கிறார்.

அங்கே காதலியுடன் உல்லாசமாக இருந்த ராஜூ இவர்களைக்கண்டதும் அலறி அடித்து எழுந்து ஓட பார்த்திருக்கிறார். ஆனால், ராஜூவின் மனைவி ஓடிவந்து பிடித்து கீழே தள்ளி உருட்டுக்கட்டையால் அடித்தது மட்டுமல்லாமல், காலால் போட்டு உதைத்து மிதித்தும் ஒரு வழி பண்ணிவிட்டார்.

இனி ஜென்மத்துக்கும் இந்த வீட்டுக்கு வரமாட்டார் என்று உறவினர்கள் சொல்லிக்கொண்டனர். ஆனால், அக்கம்பக்கத்தினரோ, அந்த ஆளை போட்டு இந்த அடி அடிச்சா, இதுக்கு பிறகுதான் அந்த பொண்ணோட ரொம்ப பாசமா இருக்கப்போறாரு பாருங்க என்று சொல்லி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews