நடிகர் விமல் மனைவி போட்டியிட கடும் எதிர்ப்பு: ஸ்டாலினுக்கு ஆதாரங்களுடன் வந்த புகார் கடிதம்

நடிகர் விமல் மனைவி போட்டியிட கடும் எதிர்ப்பு: ஸ்டாலினுக்கு ஆதாரங்களுடன் வந்த புகார் கடிதம்

நடிகர் விமல் மனைவி டாக்டர் பிரியதர்ஷினி, திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். மணப்பாறை அடுத்த பன்னாஸ்கொம்பு கிராமத்தை சேர்ந்தவர் விமல். கே.என்.நேருவின் ஆதரவு இருப்பதால் இவருக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என்று சொல்லி வருகிறார்கள்.

நடிகர் விமல் மனைவி போட்டியிட கடும் எதிர்ப்பு: ஸ்டாலினுக்கு ஆதாரங்களுடன் வந்த புகார் கடிதம்

இந்நிலையில் விமல் மனைவி தேர்தலில் போட்டியிட கடும் எதிர்ப்பு தெரிவித்து, மதுக்கூரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

நடிகர் விமல் மனைவி போட்டியிட கடும் எதிர்ப்பு: ஸ்டாலினுக்கு ஆதாரங்களுடன் வந்த புகார் கடிதம்

அந்த புகார் கடிதத்தில், ‘’நான் பட்டுக்கோட்டையில் திரையரங்கத்தை குத்தகை எடுத்து நடத்தி வந்தேன். அப்போது மன்னர் வகையறா படப்பிடிப்பிற்காக விமல் வந்திருந்தார். அவருடன் எனக்கு பழக்கமானது. தான் அந்த படத்தை சொந்தமாக தயாரிப்பதாகவும், செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும் சொன்னதால், பணம்கொடுத்தேன்.

நடிகர் விமல் மனைவி போட்டியிட கடும் எதிர்ப்பு: ஸ்டாலினுக்கு ஆதாரங்களுடன் வந்த புகார் கடிதம்

அடுத்து, சென்னையில் இருந்து 50 லட்சம் உடனே வேண்டும் என்று கேட்டார். நானும் நடிகர் என்பதால் நம்பி, வீட்டை அடமானம் வைத்து 50 லட்சம் கொடுத்தேன். நான் பணம் கொடுத்ததற்கு ஈடாக 80 லட்சத்திற்கு காசோலை கொடுத்தார். அவர் சொன்ன தேதியில் காசோலையை வங்கியில் செலுத்தியபோது போதிய பணம் இல்லை என்று திரும்பிவிட்டது.

இதுமாதிரியான மோசடி மன்னனுக்கு சீட் கொடுத்தால் திமுகவுக்கு கெட்டப்பெயர்தான் வரும்’’ என்று கூறியிருந்தார்.

நடிகர் விமல் மனைவி போட்டியிட கடும் எதிர்ப்பு: ஸ்டாலினுக்கு ஆதாரங்களுடன் வந்த புகார் கடிதம்

இதற்கு விமல், ‘’திருநாவுக்கரசுவுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நேரடி தொடர்பும், பண பரிமாற்றமும் அவருடன் எனக்கு இருந்தது இல்லை. என் வளர்ச்சி பிடிக்காமல் யாருடையை தூண்டுதலில் பேரிலோ இப்படி செய்கிறார். இது தொடர்பாக நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விமல் மனைவி போட்டியிட கடும் எதிர்ப்பு: ஸ்டாலினுக்கு ஆதாரங்களுடன் வந்த புகார் கடிதம்

இதற்கு திருநாவுக்கரசு, விமல் தரப்பில் தரப்பட்ட காசோலைகள் மற்றும் விமல் கையெழுத்து போட்டு பணம் வாங்கியதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.